Published:Updated:

சண்டிகர் பல்கலை., விடுதி வீடியோ விவகாரம்... விசாரணை வளையத்தில் ராணுவ வீரர்?!

காவல்துறை

சண்டிகர் வீடியோ விவகாரத்தில் ராணுவ வீரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது என்கிறது சிறப்பு விசாரணை குழு.

சண்டிகர் பல்கலை., விடுதி வீடியோ விவகாரம்... விசாரணை வளையத்தில் ராணுவ வீரர்?!

சண்டிகர் வீடியோ விவகாரத்தில் ராணுவ வீரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது என்கிறது சிறப்பு விசாரணை குழு.

Published:Updated:
காவல்துறை

பஞ்சாப் மாநிலம், மொஹாலியில், சண்டிகர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கிருக்கும் விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவிகள் பொது குளியலறையில் குளிக்கும்போது சக மாணவி ஒருவர் வீடியோ பதிவுசெய்ய, அது இணையத்தில் வெளியாக சர்ச்சை வெடித்தது. அதைத் தொடர்ந்து, மாணவிகள் கல்லூரி விடுதியிலேயே போராட்டத்தை தொடங்கி நடத்தி வந்தனர்.

கல்லூரி விடுதியிலேயே போராட்டம்
கல்லூரி விடுதியிலேயே போராட்டம்
ட்வீட்டர்

போலீஸார் இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், சக மாணவி ஒருவர் சுமார் 60 மாணவிகளின் குளியல் வீடியோக்களை தன்னுடைய ஆண் நண்பருக்கு பகிர்ந்ததாக கூறப்பட்டது. அதையடுத்து அந்த மாணவியைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அந்த மாணவி 23 வயதுடைய காதலன் ஒருவருக்கு, தான் மட்டுமே இருக்கும் வீடியோவை பகிர்ந்து கொண்டதாகவும், வேறு எந்த மாணவியின் வீடியோவும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காவல்துறை
காவல்துறை

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்க பஞ்சாப் காவல்துறை திங்கள்கிழமை மூன்று பேர் கொண்ட அனைத்து மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. அந்த விசாரணையில் தான் பெரும் திருப்பமாக இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக காவல்துறை, ``மாணவிகளின் அந்தரங்க வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதில் அதிர்ச்சிகரமாக ஜம்மு-வில் இருக்கும் ராணுவ காலாட்படை வீரர் ஒருவரும் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். அவரிடம் விசாரணையை முடித்த பின் மேலதிக தகவல் தெரிவிக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.