Published:Updated:

ரயில் என்ஜினை பார்ட் பார்ட்டாக கழற்றி 13 மூட்டைகளில் திருடிய கும்பல்... தீவிர விசாரணையில் போலீஸ்!

ரயில் எஞ்சினை திருடிய கும்பல் ( ட்விட்டர் )

ரயில் எஞ்சினை பார்ட் பார்ட்டாக கழற்றி 13 சாக்கு மூட்டைகளில் எடுத்துக் சென்று காயலாங்கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது.

ரயில் என்ஜினை பார்ட் பார்ட்டாக கழற்றி 13 மூட்டைகளில் திருடிய கும்பல்... தீவிர விசாரணையில் போலீஸ்!

ரயில் எஞ்சினை பார்ட் பார்ட்டாக கழற்றி 13 சாக்கு மூட்டைகளில் எடுத்துக் சென்று காயலாங்கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது.

Published:Updated:
ரயில் எஞ்சினை திருடிய கும்பல் ( ட்விட்டர் )

பீகார் மாநிலத்தில் கொள்ளை கும்பல் ஒன்று ரயில் என்ஜினை திருடிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பீகார் மாநிலம், பரௌஹ்னி நகரில் க்ரஹாரா ரயில் நிலையத்தில் பழுதுபார்ப்பதற்காக டீசல் ரயில் என்ஜின் கொண்டு வரப்பட்டது. சில நாள்களிலேயே என்ஜினின் பலப் பகுதிகள் காணமல் போயிருக்கிறது. அதைத் தொடர்ந்து, காவல்துறை அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டது. ரயில் பழுதுபார்க்கும் இடத்துக்கு அருகில் ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. அதன் மூலம் திருடர்கள் ரயில் எஞ்சினை பார்ட் பார்ட்டாக கழற்றி 13 சாக்கு மூட்டைகளில் எடுத்துக் சென்று காயலாங்கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது.

ரயில் எஞ்சினை திருடிய கும்பல்
ரயில் எஞ்சினை திருடிய கும்பல்
ட்விட்டர்

மேலும், அது தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களை அழைத்துச்சென்று ரயில் எஞ்சினின் பாகங்களை மீட்டிருக்கின்றனர் . தற்போது போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதே போல, சமீபத்தில் பூர்னியா மாவட்டத்தில் பொது மக்கள் காட்சிக்காக உள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த முழு விண்டேஜ் மீட்டர் கேஜ் நீராவி இயந்திரம் ஒருவருக்கு விற்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த ரயில்வே நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது. அந்த விசாரணையில், சமஸ்திபூர் பிரிவு கோட்ட இயந்திரப் பொறியாளர் வழங்கியதாகக் ஒரு கடிதத்தை ரயில்வே பொறியாளர் ஒருவர் கொடுத்து அந்த என்ஜினை விற்றிருக்கிறார். அந்தக் கடிதத்தை பரிசோதித்த காவல்துறை அது போலியானது எனக் கண்டுபிடித்து, அந்த குற்றவாளியையும் தேடிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.