Published:Updated:

``3 மாதக் குழந்தை; குடும்பத்தைப் பிரித்த ஊரடங்கு!"- சென்னையில் விபரீத முடிவெடுத்த பீகார் தொழிலாளி

தற்கொலை
தற்கொலை

ஊரடங்கு உத்தரவால் மனைவி மற்றும் 3 மாதக் குழந்தையைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் சென்னையில் வேலை பார்த்த பீகார் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதனால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னையில் வேலை பார்த்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். மனைவி மற்றும் 3 மாதக் குழந்தையைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி சென்னையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

கொரோனாவுக்காக கிருமி நாசினி தெளிப்பு
கொரோனாவுக்காக கிருமி நாசினி தெளிப்பு
நா.ராஜமுருகன்
`ஊரடங்கு முடியட்டும் எனச் சொன்னேன், கேட்கவில்லை!' - கணவனால் கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

இந்தச் சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் வழக்குபதிந்து விசாரித்தார். இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் கூறுகையில், ``பீகார் மாநிலம் பர்னியா பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் (25). இவர், அம்பத்தூர் சிட்கோ இண்டஸ்ரியல் பகுதியில் உள்ள கம்பெனியில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்தார்.

இவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பபிதா குமாரியுடன் திருமணம் நடந்துள்ளது. இந்தத் தம்பதியினருக்கு ரந்தீர் என்ற 3 மாதக் குழந்தை உள்ளது. 8-ம் வகுப்பு வரை படித்த ராஜீவ் வேலைக்காக சென்னை வந்தார். இங்கு ராஜீவ்வின் உறவினர் லட்டு என்பவர், பெயின்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் மூலம் ராஜீவ், அங்கு வேலைக்குச் சேர்ந்துள்ளார். ராஜீவ், லட்டு மற்றும் 3 பேர் கம்பெனி அருகே தங்கியிருந்தனர்.

`ஊரடங்கால் அலறல் சத்தம் கேட்கல' -குட்டி போட்ட நாயைக் கல்லால் எறிந்த முதியவருக்கு நேர்ந்த கொடூரம்
எப்.ஐ.ஆர் நகல்
எப்.ஐ.ஆர் நகல்

கொரோனா வைரஸ் பரவுதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ராஜீவ் வேலை பார்த்த கம்பெனியும் மூடப்பட்டது. அதனால் வேலையில்லாமல் ராஜீவ், அறையிலேயே முடங்கியிருந்தார். குழந்தை மற்றும் மனைவியைப் பார்க்க வேண்டும் என அவரின் உறவினர் லட்டுவிடம் கூறியுள்ளார். அதற்கு லட்டு, தற்போது ரயில் சேவை இல்லாததால் ஊருக்குச் செல்ல முடியாது. ஊரடங்கு முடிந்ததும் ஊருக்குச் செல்லலாம் என்று ஆறுதல் கூறியுள்ளார்.

இந்தச் சூழலில் 12.4.2020 காலை 6 மணியளவில் கழிவறையில் ராஜீவ், கேபிள் வயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு ராஜீவ்வின் சடலம், சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது" என்றனர்.

ரயில்வே ட்ராக்கில் கிடந்த உடல்.. கொரோனா நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட ஜெர்மன் அமைச்சர்!
தற்கொலை
தற்கொலை
Representational image

ராஜீவ் தற்கொலை குறித்து அவரின் உறவினர் லட்டு கொடுத்த புகாரில், ``என்னுடைய பெரியப்பா மகன்தான் ராஜீவ். 11.4.2020ம் தேதி இரவு 8 மணியளவில் சாப்பிடச் செல்லும்போது ராஜீவ்வை அழைத்தேன். அப்போது அவர், வரவில்லை. அதனால் நான் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றுவிட்டேன். அதன்பிறகுதான் ராஜீவ் தற்கொலை செய்துள்ளார். ராஜீவ், சொந்த ஊருக்குச் சென்று மனைவி, மகனைப் பார்க்க வேண்டும் என்று புலம்பிவந்தார். அந்த ஏக்கத்தில்தான் அவர் தற்கொலை செய்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

ராஜீவ் தற்கொலை செய்த சம்பவம் அவருடன் தங்கியிருந்தவர்களுக்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு