Published:Updated:

ராமேஸ்வரம்: ரயில் தண்டவாளத்தில் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பைக்! - போலீஸார் விசாரணை

தீ வைத்து எரிக்கப்பட்ட இரு சக்கர வாகனம்

ராமேஸ்வரம் ஒண்டிவீரன் நகர்ப் பகுதியில் அதிகாலை 3:10 மணிக்கு ரயில் வந்தபோது தண்டவாளத்தில் தீ எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்த டிரைவர் ரயிலை சற்று தூரத்திலேயே நிறுத்தினார்.

ராமேஸ்வரம்: ரயில் தண்டவாளத்தில் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பைக்! - போலீஸார் விசாரணை

ராமேஸ்வரம் ஒண்டிவீரன் நகர்ப் பகுதியில் அதிகாலை 3:10 மணிக்கு ரயில் வந்தபோது தண்டவாளத்தில் தீ எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்த டிரைவர் ரயிலை சற்று தூரத்திலேயே நிறுத்தினார்.

Published:Updated:
தீ வைத்து எரிக்கப்பட்ட இரு சக்கர வாகனம்

தெலங்கானா மாநிலம், செகந்தராபாத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. ராமேஸ்வரம் ஒண்டிவீரன் நகர்ப் பகுதியில் அதிகாலை 3:10 மணிக்கு ரயில் வந்தபோது தண்டவாளத்தில் தீ எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்த டிரைவர் ரயிலை சற்று தூரத்திலேயே நிறுத்தினார்.

பின்னர் ரயிலை விட்டு இறங்கி, அருகில் சென்று பார்த்தபோது, இரு சக்கர வாகனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் எரிந்துகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அதைத் தொடர்ந்து தண்டவாளத்தில் வேறு ஏதேனும் பாறைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்கின்றனவா என ராமேஸ்வரம் ரயில் நிலையம் வரை தண்டவாளம் முழுவதும் ஆய்வு செய்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தண்டவாளத்தில் எரிந்து கிடந்த இருசக்கர வாகன பாகங்கள்
தண்டவாளத்தில் எரிந்து கிடந்த இருசக்கர வாகன பாகங்கள்

அதன் பின்னர் ரயில் செல்ல அனுமதித்தனர்.‌ இதனால் ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக 3:55 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைந்தது.

இது குறித்து ராமேஸ்வரம் போலீஸார் நடத்திய விசாரணையில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மெய்யம்புளியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவருடையது எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டு வாசலில் மது போதையில் கலாட்டா செய்த சிலரை சத்தம் போட்டு அனுப்பிவைத்ததாகவும், அதனால் அவர்கள் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்று தீ வைத்து எரித்திருக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism