Published:Updated:

டூவீலரில் மறித்த மர்மநபர்கள்; துப்பாக்கிச்சூடு! - பா.ஜ.க பிரமுகர் கொலையால் தகிக்கும் உ.பி கிராமம்

கொலை
கொலை ( Representational Image )

பா.ஜ.க பிரமுகர் கொலையால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம், அசம்கர்கில் பா.ஜ.க பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஹரிபூர் கிராமத்திலுள்ள பவய் பகுதியில் வசித்துவந்தவர் அர்ஜுன் யாதவ். அந்தப் பகுதி பஞ்சாயத்து உறுப்பினரான அவர், ஆயுர்வேத மருந்துக் கடை ஒன்றையும் நடத்திவந்திருக்கிறார். நேற்றிரவு 9 மணி அளவில், தனது கடையை அடைத்துவிட்டு, பவாய் பகுதியிலுள்ள வீட்டுக்குக் கிளம்பியிருக்கிறார்.

அர்ஜுன் யாதவ்
அர்ஜுன் யாதவ்
timesofindia
சென்னை: காதலுக்கு எதிர்ப்பு;  தோசைக்கரண்டியால் அடித்துக்  குழந்தை கொலை! - நாடகமாடிய இளைஞர் கைது

வீடு திரும்பும் வழியில், இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அர்ஜுன் சுடப்பட்டபோது, அங்கு மக்கள் கூட்டம் கூடியிருக்கிறது. இருந்தும், சம்பவ இடத்திலிருந்து கொலையாளிகள் தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து அசம்கர்க் காவல் கம்காணிப்பாளர் சுதிர்குமார் சிங் மற்றும் போல்பூர் எஸ்.ஐ ராஜேஷ் குமார் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அர்ஜுனுக்கு, அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு
Representational Image

அர்ஜுன் யாதவ் கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்த விவரங்களை போலீஸார் விசாரித்துவருகிறார்கள். `கொலைக்கான காரணம் குறித்து குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. கொலையாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள்’ என்று அசம்கர்க் எஸ்.பி சுதிர்குமார் சிங் தெரிவித்தார். கொலையால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு