Published:Updated:

ஆள்மாற்றி ரெய்டு நடத்திய அதிகாரிகள்; `சமாஜ்வாடி பெர்ஃப்யூம்' விவகாரத்தில் ட்விஸ்ட்!

பியூஸ் ஜெயின்
News
பியூஸ் ஜெயின்

``பா.ஜ.க-வினர் ஆள் மாற்றி சொந்த ஆளிடமே தவறுதலாக ரெய்டு நடத்திவிட்டனர். பியூஸ் ஜெயினுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது" என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் சிகர் பான் மசாலா மற்றும் பெர்ஃப்யூம் தயாரிக்கும் பியூஸ் ஜெயின் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினரும், ஜி.எஸ்.டி வரித்துறை அதிகாரிகளும் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பியூஸ் ஜெயின் வீட்டிலிருந்து ரூ.250 கோடி அளவுக்குப் பணம், 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ரெய்டு சம்பவத்தை உத்தரப்பிரதேசத் தேர்தலுக்கு பா.ஜ.க பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ரெய்டு சம்பவத்தைச் சுட்டிக்காட்டி சமாஜ்வாடி கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். பியூஸ் ஜெயின் `சமாஜ்வாடி அத்தர்' என்ற பெயரில் பெர்ஃப்யூம் வெளியிட்டதால்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே சமாஜ்வாடி அத்தர் பெர்ஃப்யூமை பியூஸ் ஜெயின் வெளியிடவில்லை என்றும், சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த புஷ்பராஜ் ஜெயின் என்பவர்தான் வெளியிட்டார் என்றும் சமாஜ்வாடி கட்சி தெரிவித்திருக்கிறது.

பியூஸ் ஜெயின் வீட்டில்
பியூஸ் ஜெயின் வீட்டில்

``பா.ஜ.க-வினர் ஆள் மாற்றி, சொந்த ஆளிடமே தவறுதலாக ரெய்டு நடத்திவிட்டனர். பியூஸ் ஜெயினுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது" என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தனது ட்விட்டரில், ``ரெய்டில் காமெடியான தவறுகள் நடந்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த காமெடி இத்தோடு நிற்கப்போவதில்லை. பா.ஜ.க-வும், சமாஜ்வாடியும் ஒருவரை ஒருவர் குறை சொல்லும்போது, மேலும் பலர் பெயர்கள் வெளியில் வரும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். `சமாஜ்வாடி அத்தர்’ வெளியிட்ட புஷ்பராஜ் ஜெயின் இது குறித்துக் கூறுகையில், ``எனக்கும் பியூஸ் ஜெயினுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. இந்த அளவுக்குக் கீழ்த்தரமான அரசியல் செய்வது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த ரெய்டு என்னைக் குறிவைத்து தவறுதலாக பியூஸ் ஜெயினிடம் நடத்தப்பட்டிருக்கலாம்" என்று தெரிவித்தார்.

புஷ்பராஜ் ஜெயின்
புஷ்பராஜ் ஜெயின்

இது குறித்து ஜி.எஸ்.டி வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``தவறுதலாக வேறு ஒருவர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. வரி ஏய்ப்பு செய்வதாக எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த ரெய்டு நடத்தப்பட்டது" என்றனர். ரெய்டு ஆள் மாறி நடத்தப்பட்டாலும் வரி ஏய்ப்பு செய்த நபர் பிடிபட்டது அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.