Published:Updated:

சோனாலி போகத்: `உணவில் விஷம் கலந்து கொலைசெய்துவிட்டனர்’ - பாஜக பெண் தலைவரின் சகோதரர் புகார்

சோனாலி

``பாஜக தலைவர்களில் ஒருவரும், என் சகோதரியுமான சோனாலி போகத்தை அவரின் இரண்டு கூட்டாளிகள் கொலைசெய்துவிட்டனர்” என சோனாலியின் சகோதரர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

சோனாலி போகத்: `உணவில் விஷம் கலந்து கொலைசெய்துவிட்டனர்’ - பாஜக பெண் தலைவரின் சகோதரர் புகார்

``பாஜக தலைவர்களில் ஒருவரும், என் சகோதரியுமான சோனாலி போகத்தை அவரின் இரண்டு கூட்டாளிகள் கொலைசெய்துவிட்டனர்” என சோனாலியின் சகோதரர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
சோனாலி

ஹரியானா பாஜக தலைவர்களில் ஒருவரும், நடிகையுமான சோனாலி போகத் கடந்த திங்கள்கிழமை இரவு கோவாவில் தனது நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பு ஏற்பட்டுத்தான் இறந்தார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் சோனாலி மரணமடையும் முன்பு தன்னுடைய தாயாருக்கு போன் செய்து, `எனக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது’ என்றும், `சாப்பிட்ட பிறகு உடல்நிலை சரியில்லை’ என்றும் இரவு போன் செய்து பேசியதாக சோனாலியின் சகோதரி தெரிவித்தார். அதோடு இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே, சோனாலியின் குடும்பத்தினர் அவரின் உடலை வாங்குவதற்காக கோவாவுக்கு வந்திருந்தனர். சோனாலியின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக இருந்தது.

சோனாலி போகத்: `உணவில் விஷம் கலந்து கொலைசெய்துவிட்டனர்’ - பாஜக பெண் தலைவரின் சகோதரர் புகார்

ஆனால் சோனாலியின் சகோதரர் ரிங்கு, தனது சகோதரி அவரின் இரண்டு கூட்டாளிகளால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்று போலீஸில் புகாரளித்திருக்கிறார். இறப்பதற்கு முன்பு சோனாலி தன்னுடசிய தாயார், சகோதரி, மைத்துனர் ஆகியோர் போன் செய்து பேசியதாகவும், அப்போது மிகவும் வருத்தத்தில் இருந்ததாகவும், அவர் தன் கூட்டாளிகள் இரண்டு பேருக்கு எதிராகப் புகார் கூறியிருந்தார். ``சோனாலி மிரட்டப்பட்டிருந்தார். அதோடு அவர் பார்ட்டியில் சாப்பிட்ட சாப்பாட்டில் ஏதோ கலந்திருக்கிறது. அதனால்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார். சோனாலியின் ஹரியானா பண்ணை வீட்டில் இருந்த லேப்டாப், சிசிடிவி கேமரா உட்பட முக்கியப் பொருள்கள் காணாமல்போயிருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சோனாலியை அவரின் கூட்டாளி ஒருவர் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்’ என ரிங்கு தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ரிங்குவின் புகாரின் அடிப்படையில் போலீஸார் இன்னும் வழக்கு பதிவுசெய்யவில்லை என்றும் ரிங்கு குற்றம்சாட்டியுள்ளார்.

சோனாலியின் குடும்பத்தினர் பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்க வேண்டும் என்று குடும்ப உறுப்பினர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு ரிங்குவின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்போது சோனாலியின் உடல் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய இரண்டு தடயவியல் நிபுணர்கள், இரண்டு டாக்டர்கள் குழுவை அரசு அமைத்திருக்கிறது. சோனாலி டி.வி நிகழ்ச்சிகள், `பிக் பாஸ்’ நிகழ்ச்சி மற்றும் சில படங்களில் நடித்திருக்கிறார்.