Published:Updated:

திருச்சி: கொடிகட்டிப் பறக்கும் லாட்டரி விற்பனை; கண்டும் காணாமல் போலீஸ்? - என்ன நடக்கிறது?

லாட்டரிச்சீட்டு விற்பனை
News
லாட்டரிச்சீட்டு விற்பனை

மூன்று நம்பர் லாட்டரிச்சீட்டில் கடைசி ஒரு நம்பர் இருந்தால் 100 ரூபாய், இரண்டு நம்பர் இருந்தால் 1,000 ரூபாய், மூன்று நம்பரும் இருந்தால் 25,000 ரூபாய் பரிசு என விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறந்துகொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அண்மையில் ஜூனியர் விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து லாட்டரி விற்பனையைத் தடுக்க பல யுக்திகளைக் கையாண்டார்கள் தமிழக போலீஸார். ஆனால் திருச்சி மாவட்டம் மட்டும் இதற்கு விதிவிலக்கு என்பதுபோல இருக்கிறது கள நிலவரம்.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

திருச்சி மாவட்டம், மணப்பாறைப் பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி மற்றும் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக, பலமுறை போலீஸாருக்குத் தகவல் சென்றிருக்கிறது. ஆனால் அவர்கள் கொஞ்சம்கூட கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பிறகு, திருச்சியில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ஆதாரங்களுடன் வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்ததும், அவர் உத்தரவின்பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜனனி பிரியா தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது அனுமதியின்றி வெளிமாநில ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முருகேசன், கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், அய்யாவு உள்ளிட்ட நான்கு பேரைக் கைதுசெய்தனர்.

லாட்டரிச்சீட்டு விற்பனை செய்தவர்கள்
லாட்டரிச்சீட்டு விற்பனை செய்தவர்கள்

அவர்களிடமிருந்து 3,500 ரூபாய் பணம், மூன்று செல்போன்கள், இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லாட்டரி விற்பனை எப்படி நடக்கிறது என்று விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டோம். ``மூன்று நம்பர் லாட்டரிச் சீட்டில் கடைசி ஒரு நம்பர் இருந்தால் 100 ரூபாய், இரண்டு நம்பர் இருந்தால் 1,000 ரூபாய், மூன்று நம்பரும் இருந்தால் 25,000 ரூபாய் பரிசு எனச் சொல்லி ஏழைக் கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து இந்த லாட்டரிச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

லாட்டரிச்சீட்டு விற்பனை செய்தவர்கள்
லாட்டரிச்சீட்டு விற்பனை செய்தவர்கள்

30 ரூபாய், 60 ரூபாய், 120 ரூபாய் என்ற விலைகளில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் விற்பனை நடந்துவருகிறது. பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் போன்ற மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஏகப்பட்ட கிளைகளுடன் இந்த லாட்டரிச்சீட்டு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. சமூக விரோதிகள், அரசியல் பலம் உள்ளவர்கள், காவல்துறையினரின் ஆதரவுடன் இதை ஏராளமானோர் குடிசைத் தொழிலாகச் செய்துவருகிறார்கள்.

இது கேரளா லாட்டரி என்பதால் காலை முதலே விற்பனையைத் தொடங்கிவிடுகிறார்கள். முன்புபோல் லாட்டரியைக் கடைகளில்வைத்து விற்பனை செய்வதில்லை. டெக்னாலஜி வளர வளர இவர்களது தொழிலையும் அப்டேட் செய்துகொண்டே செல்கிறார்கள். டிக்கெட் வேண்டுமென்றால் வழக்கமான வாடிக்கையாளர்கள் போனில் நம்பரைச் சொன்னால் போதும்.

லாட்டரிச்சீட்டு விற்பனை
லாட்டரிச்சீட்டு விற்பனை

முகவர் வாடிக்கையாளரின் பெயருடன் அந்த நம்பரையும் எழுதி வைத்துக்கொள்வார். வாட்ஸ்அப்பில் அந்த எண்ணுடைய போட்டோவை அனுப்புவார், பணத்தை கூகுள் பே மூலமாக அனுப்பச் சொல்லுவார். நேரில் செல்பவர்களுக்கு எண்ணை பேப்பரில் எழுதிக்கொடுப்பார்கள். மாலை 3 மணிக்குக் கேரளாவில் ரிசல்ட் வெளியாகிவிடும். அதை இணையதளம் மூலமாகத் தெரிந்துகொண்டு பரிசுத்தொகையைப் பெற்றுச் செல்வார்கள்.

இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என விசாரித்ததில், வேலையில்லாமல் தடுமாறும் இளைஞர்கள், முதியவர்களைவைத்து லாட்டரி தொழிலை நடத்திவருகிறார்கள் என்பது தெரியவந்தது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மத்தியப் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், பால்பண்ணை,

திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

திருச்சி புறநகர்ப் பகுதியான மணப்பாறை, துறையூர், முசிறி, குளித்தலை, லாலாப்பேட்டை எனப் பல பகுதிகளில் மூன்று நம்பர், ஒரு நம்பர் என லாட்டரி விற்பனையைத் தனித்தனியாக கிளையாக ஆரம்பித்து பலர் நடத்திவருகின்றனர். யார் யார் நடத்துகிறார்கள் என்பது அங்கிருக்கும் போலீஸாருக்கு நன்கு தெரியும். ஆனால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் காரணம் மாமூல் சரியாக சென்றுகொண்டிருக்கிறது" என்றனர்.