Published:Updated:

விபரீதத்தில் முடிந்த காதல்; இளம்பெண் வாழ்க்கையில் விளையாடிய உறவினர்! - தாயைக் கொலை செய்த கொடூரம்

`அம்மாவைக் கொலை செய்துவிட்டால் சொத்து முழுவதும் உனக்குத்தான் கிடைக்கும். என் சொல்படி கேள் உனக்கு பாதி எனக்கு பாதி நீ உன் காதலனுடன் சந்தோஷமாக இருக்கலாம்' எனக் கூறியுள்ளார்.

கொலை
கொலை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஹயாத் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீனிவாஸ் - ரஞ்சிதா தம்பதி. இவர்களுக்கு 19 வயதில் கீர்த்தி என்ற மகள் இருக்கிறார். லாரி டிரைவரான ஸ்ரீனிவாஸ் பொதுவாக வீட்டில் அதிக நாள்கள் இருக்க மாட்டார். தாய் ரஞ்சிதா மகள் கீர்த்தி இருவர் மட்டுமே இருப்பார்கள். வேலைக்குச் சென்ற ஸ்ரீனிவாஸ் கடந்த 24-ம் தேதி வீடு திரும்பியுள்ளார். அப்போது மகள் மற்றும் மனைவி இருவரும் வீட்டில் இல்லை. இதையடுத்து மகள் கீர்த்தியின் செல்போனுக்கு அழைத்து விசாரித்துள்ளார்.

அப்போது நான் விசாகப்பட்டினத்தில் இருக்கிறேன் அம்மா எங்கே என்று தெரியவில்லை என பதிலளித்துள்ளார். விசாகப்பட்டினத்திலிருந்து கீர்த்தி வீடு திரும்பினார். இதற்கிடையில் மனைவி குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். யாருக்கும் எந்தத் தகவலும் தெரியவில்லை. ரஞ்சிதா மாயமானது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 மாயம்
மாயம்

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது`என் அப்பா மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் ஒரு குடிகாரர். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அம்மாவை அடித்துத் துன்புறுத்துவார். நான் கல்லூரிக்குச் சென்றிருந்த சமயத்தில் அப்பா, அம்மாவைக் கொலை செய்திருக்கலாம்" எனக் கூறியுள்ளார். இதையடுத்து கீர்த்தியின் தந்தையிடம் விசாரித்தனர். நான் வேலைக்குப் போய் ஒருவாரம் கழித்து இப்பத்தான் வீட்டுக்கு வர்றேன் எனக் கூறியுள்ளார்.

`இனி காஷ்மீர் வருமானமே வேண்டாம்!'- தீவிரவாதிகளின் தாக்குதலால் நிலைகுலைந்த தொழிலாளிகளின் குடும்பம்

இதன்பின்னர் தந்தை மகள் இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர். விசாகப்பட்டினம் பயணம் குறித்து கீர்த்தியிடம் ஸ்ரீனிவாஸ் விசாரித்துள்ளார். கீர்த்தியிடமிருந்து சரியான பதில் இல்லை. மனைவி காணாமல்போன பதற்றத்தில் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மனைவி குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து வந்துள்ளார். அப்போது கீர்த்தியுடைய தோழியின் தந்தை,``கடந்த சில நாள்களுக்கு முன்பு ரஞ்சிதா, `வெளியூர் செல்கிறேன் கீர்த்தியை பார்த்துக்கொள்ளுங்கள்' என்றார். கீர்த்தி இங்குதான் தங்கியிருந்தார்” எனக் கூறியுள்ளார். கீர்த்தி விசாகப்பட்டினம் சென்றதாக ஏன் பொய் சொல்ல வேண்டும். மனைவி ரஞ்சிதா எங்கு சென்றிருப்பார் என ஸ்ரீனிவாஸ் குழம்பியுள்ளார்.

ரஞ்சிதா
ரஞ்சிதா

இதற்கிடையில் ரஞ்சிதாவின் உடல் அழுகிய நிலையில் ரயில்வே தண்டவாளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் ஸ்ரீனிவாஸ் மற்றும் கீர்த்தியை காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது ஸ்ரீனிவாஸ் மகள் விசாகப்பட்டினத்தில் இருப்பதாக கூறிய நாளில் ஹயாத் நகரில்தான் இருந்தார் என்ற தகவலை காவலர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, கீர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். ``அம்மாவை நான் கொலை செய்துவிட்டேன். நண்பரின் உதவியுடன் உடலை போர்வையில் கட்டி தண்டவாளத்தில் வீசியதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக கீர்த்தி அவரது நண்பர்களான பால் ரெட்டி, சசி குமார் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.

`பொள்ளாச்சி பாலியல் வழக்கிலும் அதே தவறு!' - குண்டர் சட்டத்திலிருந்து தப்பித்த திருநாவுக்கரசு, சபரி

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரிகள், ``கீர்த்தி தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். கீர்த்தியின் நெருங்கிய உறவினர்தான் சசிக்குமார். கீர்த்தியும் பால்ரெட்டியும் காதலித்து வந்துள்ளனர். பால் ரெட்டியின் தங்கையும், கீர்த்தியும் தோழிகள். இருவரும் ஒரே கல்லூரியில்தான் படிக்கின்றனர். தோழி மூலமாகத் தான் பால் ரெட்டி அறிமுகமாகியுள்ளார். கீர்த்தி அடிக்கடி பால் ரெட்டியின் இல்லத்துக்குச் சென்று அவரை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இதன் காரணமாக 2018-ம் ஆண்டு, செப்டம்பரில் கர்ப்பமானார். கருவைக் கலைக்க முடிவு செய்து சசிக்குமாரின் உதவியை நாடியுள்ளனர்.

காதல்
காதல்

சசிகுமாரும் இதற்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளார். அதன்படி கீர்த்தியின் தாய் ரஞ்சிதாவிடம் நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஒரு தனியார் மருத்துவமனையில் கீர்த்தியின் கருவைக் கலைத்துள்ளனர். அதன் பின்னர் சசி, தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்தச் சம்பவத்தைக் கூறி தொடர்ந்து மிரட்டி கீர்த்திக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனது குடும்பத்தினருக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்பதால் சசியின் சொல்படி நடந்துள்ளார். சசிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கீர்த்தியுடன் தனிமையில் இருக்கும் போது புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். வெளியில் யாரிடமாவது கூறினால் இந்தப் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வைத்துள்ளார். சசியுடன் கீர்த்தி அடிக்கடி வெளியில் செல்வது ரஞ்சிதாவுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சசியுடன் பழகுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் ரூ.10 லட்சம் வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளார். தினமும் தொந்தரவு செய்துள்ளார். அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கு செல்வேன் எனக் கீர்த்தி கேட்டுள்ளார்.

கீர்த்தி
கீர்த்தி

`உன் அம்மாவைக் கொலை செய்துவிட்டால் சொத்து முழுவதும் உனக்குத்தான் கிடைக்கும். என் சொல்படி கேள். உனக்கு பாதி; எனக்கு பாதி. நீ உன் காதலனுடன் சந்தோஷமாக இருக்கலாம்' எனக் கூறியுள்ளார். கொலை செய்வதற்கான பிளான் போட்டு கொடுத்துள்ளார். அக்டோபர் 19-ம் தேதி நள்ளிரவில் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். ரஞ்சிதா இரவில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரது முகத்தில் கீர்த்தி மிளகாய்ப் பொடி தூவியுள்ளார். விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு. சசியை வீட்டுக்குள் அனுமதித்துள்ளார். கீர்த்தி தன் தாயின் கைகளை இறுகப்பிடித்துக்கொண்டார். சசிக்குமார் துண்டால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.

இதன்பின்னர் பால் ரெட்டியின் தங்கை தனது தோழி என்பதால் அவரது வீட்டில் தஞ்சமடைய கீர்த்தி முடிவு செய்தார். பால் ரெட்டியின் தந்தையிடம் தன் தாய் ரஞ்சிதா போல் போனில் பேசியுள்ளார். குடும்பத்தோட வெளியூர் போவதாகவும் அதுவரை கீர்த்தி உங்கள் வீட்டில் இருக்கட்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து பால் ரெட்டி வீட்டில் கீர்த்தி தஞ்சமடைந்தார். சசி, கீர்த்தி இருவரும் ரஞ்சிதா தற்கொலை செய்துகொண்டது போல் செட்டப் செய்ய முயன்றுள்ளனர்.

கொலை
கொலை

இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. இரண்டு நாள்களாக முயன்றுள்ளனர் அவர்களால் தங்களது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. நாள்கள் கடக்கவும் உடல் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதையடுத்து போர்வையில் ரஞ்சிதாவின் உடலைச் சுற்றி காரில் ஏற்றிக்கொண்டு சென்று ரயில்வே தண்டவாளத்தில் வீசியுள்ளனர். கீர்த்தி தனது வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு பால் ரெட்டியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். விசாரணையில் கீர்த்தி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் ”எனத் தெரிவித்தனர்.