Published:Updated:

சேலம்: கொலையான பெண்; 250 நாள்களாகியும் ஒப்படைக்கப்படாத உடல்! - காரணம் என்ன?

சேலம் - கொலை

தேஜ் மண்டல் கொலைசெய்யப்பட்டு எட்டு மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் சேலம் அரசு மருத்துவமனையிலேயே இருக்கிறது.

பெங்களூரைச் சேர்ந்தவர் தேஜ் மண்டல். மாற்றுத்திறனாளியான இவர், சேலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் வீட்டில் வாடகைக்கு தங்கிக்கொண்டு சேலத்தில் அழகாபுரம், பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய இடங்களில் ஸ்பா மாசாஜ் சென்டர் நடத்திவந்தார். இந்நிலையில் கடந்த 2021, அக்டோபர் 15-ம் தேதி, தான் தங்கியிருந்த வீட்டுக்குள் சூட்கேஸில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு இறந்துகிடந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து அஸ்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தேஜ் மண்டலின் மசாஜ் சென்டரில் வங்க தேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வேலை பார்த்துவந்ததும், அவர்கள் தற்போது தலைமறைவாக இருந்துவருவதால், கொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டது. அதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து அந்தப் பெண்களைத் தேடத் தொடங்கினர். இதற்கிடையில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் செல்போனில் இருக்கும் எண்களை வைத்து டிராக் செய்ததில், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்பவர் அடிக்கடி பேசிவந்தது தெரியவந்தது. அதனால் அந்த நபரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவந்தது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தேஜ் மண்டல் கொலைசெய்யப்பட்டு எட்டு மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் சேலம் அரசு மருத்துவமனையிலேயே இருக்கிறது.

கொலைசெய்யப்பட்ட பெண்
கொலைசெய்யப்பட்ட பெண்

இது குறித்து சேலம் மாநகர துணை ஆணையர் மாடசாமியிடம் பேசியபோது, ``இறந்துபோன பெண்னின் உறவினர்கள் சேலத்தில் யாரும் இல்லை. எங்களுடைய விசாரணையில் அவருடைய சகோதரர் வெளிநாட்டில் இருப்பதாகத் தெரியவந்தது. அவருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, அவர் வருவதற்கான டிக்கெட் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் ஒரு வாரத்தில் அவருடைய சகோதரர் வந்தவுடன் அந்தப் பெண்ணின் உடல் அவரிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.