Published:Updated:

பாம்பன் கடற்கரையில் கரை ஒதுங்கிய பெண் உடல்! - இலங்கையிலிருந்து அகதியாக வந்தவரா?

பாம்பன்

பாம்பன் கடற்கரையில் இன்று காலை இறந்த பெண் உடல், நிர்வாண நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. அவர் இலங்கை அகதியா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பாம்பன் கடற்கரையில் கரை ஒதுங்கிய பெண் உடல்! - இலங்கையிலிருந்து அகதியாக வந்தவரா?

பாம்பன் கடற்கரையில் இன்று காலை இறந்த பெண் உடல், நிர்வாண நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. அவர் இலங்கை அகதியா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
பாம்பன்

பாம்பன் குந்துகால் கடற்கரையில் இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், நிர்வாண நிலையில் கரை ஒதுங்கிக்கிடந்த பெண்ணின் உடலை பார்த்துள்ளனர். தகவலறிந்து தங்கச்சிமடம் மற்றும் கடலோர காவல் படை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இறந்த பெண்ணின் உடல் தண்ணீரில் ஊறிப்போய் தோல்கள் உரிந்து காணப்பட்டது. இவர் இறந்து மூன்று நாள்களுக்கு மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்துக்கு வந்தபோது படகு கவிழ்ந்து, கடலில் மூழ்கி அவர் இறந்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

நேற்று இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்துக்கு வந்த குடும்பத்தினரைக் கடலோர காவல் படை போலீஸார் விசாரித்தபோது, அவர்கள், கடந்த 21-ம் தேதி இலங்கையிலிருந்து புறப்பட்ட போது நடுக்கடலில் படகு சேதமாகி படகு மூழ்கும் நிலைக்குச் சென்றுள்ளது. பின்னர் வேறு கப்பல் மூலம் மூன்று நாள்களுக்குப் பிறகு தமிழகத்துக்கு அவர்கள் வந்தடைந்தது தெரியவந்தது.

கடற்கரையில் ஒதுங்கியுள்ள பெண் உடல்
கடற்கரையில் ஒதுங்கியுள்ள பெண் உடல்

இதேபோல் இலங்கையிலிருந்து தமிழகத்துக்குள் படகு மூலம் அகதியாக நுழைய முயன்றபோது படகு கவிழ்ந்து இவர் இறந்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. தற்போது இவருடன் வேறு சிலர் வந்திருக்கக்கூடும் என சந்தேகப்படுவதால், நடுக்கடலில் படகு ஏதேனும் கவிழ்ந்திருக்கிறதா என ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் கடலில் போலீஸார் தேடிவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism