Published:Updated:

சென்னை ஐஐடி: எரிந்தநிலையில் கண்டெடுக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானியின் மகன் உடல்-சிக்கியது தற்கொலைக் கடிதம்

 மரணம்
மரணம்

சம்பவத்தன்று காலை உன்னி கிருஷ்ணன் நாயர் கல்லூரிக்கு வந்ததை சிசிடிவி மூலம் போலீஸார் கண்டறிந்தனர்.

சென்னை கோட்டூர்புரத்தில் ஐஐடி கல்வி நிறுவனம் இயங்கிவருகிறது. கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால், ஐஐடி விடுதியில் மட்டுமே மாணவர்கள் தங்கி ஆன்லைன் வகுப்பில் படித்துவருகின்றனர். இந்தநிலையில், ஐஐடி வளாகத்திலுள்ள ஹாக்கி மைதானத்தில் விளையாடுவதற்காக, விளையாட்டுப் பயிற்சியாளர் ராஜூ தனது நண்பர்களுடன் வந்தார்.

அப்போது எரிந்த நிலையில் ஆண் வாலிபரின் சடலம் ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் நாயர் (22) என்பது தெரியவந்தது. மேலும், அவர் கேரளாவில் பி.டெக் படிப்பை முடித்துவிட்டு 2021-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ஐஐடி-யில் புராஜெக்ட் அசோசியேட்டாகச் சேர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர் வேளச்சேரியிலுள்ள லதா தெருவில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தார்.

சடலம்
சடலம்

சம்பவத்தன்று காலை உன்னி கிருஷ்ணன் நாயர் கல்லூரிக்கு வந்ததை சிசிடிவி மூலம் போலீஸார் கண்டறிந்தனர். தொடர்ந்து அவரின் மரணம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். போலீஸார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை: செல்லமாக வளர்த்த நாயுடன் தற்கொலை செய்த தம்பதி; உருக்கமான கடிதம் சிக்கியது!

இந்தநிலையில், உன்னி கிருஷ்ணன் தங்கியிருந்த வேளச்சேரி வீட்டில் போலீஸார் ஆய்வு செய்தபோது 11 பக்கம்கொண்ட தற்கொலைக் கடிதம் கிடைத்தது அதில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதியிருப்பதாகத் தெரியவந்துள்ளது..

இவருடன் தங்கியிருக்கும் கேரளாவைச் சேர்ந்த அனில்குமார், சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். உன்னி கிருஷ்ணனின் தந்தை ரகு, இஸ்ரோ விஞ்ஞானி என்பதும் தெரியவந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு