Published:Updated:

சென்னை: போதைக்காக உடல்வலி நிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்தும் கும்பல் - இளைஞர்கள் சிக்கியது எப்படி?

உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்றவர்கள்

மும்பையிலிருந்து உடல்வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி, சென்னையில் சட்டவிரோதமாக விற்ற இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை: போதைக்காக உடல்வலி நிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்தும் கும்பல் - இளைஞர்கள் சிக்கியது எப்படி?

மும்பையிலிருந்து உடல்வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி, சென்னையில் சட்டவிரோதமாக விற்ற இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்றவர்கள்

சென்னையில் போதைக்காக உடல்வலி நிவாரண மாத்திரைகளைச் சிலர் பயன்படுத்திவருகின்றனர். அதைத் தடுக்க போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். குறிப்பாக, டாக்டரின் பரிந்துரையில்லாமல் மருந்தகங்களில் மாத்திரைகளை விற்கக் கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனால், அதையும் மீறிச் சில மருந்தகங்களில் சட்டவிரோதமாக, போதைக்காக பயன்படுத்தப்படக்கூடிய உடல்வலி நிவாரண மாத்திரைகள் உட்பட சில மாத்திரைகள் விற்கப்படுகின்றன. அது குறித்துக் கிடைக்கும் தகவலின்படி போலீஸார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

மாத்திரைகள்
மாத்திரைகள்

இந்த நிலையில், சென்னை மவுன்ட் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு புழுதிவாக்கத்திலுள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அந்த வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அந்த வீட்டில் உடல்வலி நிவாரண மாத்திரைகள், ஊசிகள் இருந்தன. இதையடுத்து அந்த வீட்டிலிந்து 523 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 19 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக புழுதிவாக்கம் பாலாஜி நகரைச் சேர்ந்த பிரவீன்குமார் (25), சென்னை கண்ணதாசன் நகரைச் சேர்ந்த மகேஷ் (32) ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை மும்பையிலிருந்து வாங்கி சென்னையில் விற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``மகேஷ், பிரவீன்குமார் ஆகியோர் ஆன்லைன் மூலம் உடல்வலி நிவாரண மாத்திரைகளை வாங்கியிருக்கிறார்கள். பின்னர் அந்த மாத்திரைகளை இரண்டு மடங்கு விலைக்கு போதைக்கு அடிமையான இளைஞர்களிடம் விற்றுவந்திருக்கிறார்கள். அதன் மூலம் அதிக அளவில் வருமானம் கிடைத்ததால், இவர்கள் இருவரும் தொடர்ந்து உடல்வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி, விற்றுவந்திருக்கிறார்கள். இந்த மாத்திரைகளை ஊசி மூலமாக ஏற்றுவதற்காக இவர்கள் இருவரும் ஊசிகளையும் வைத்திருந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குப் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என விசாரித்துக்கொண்டிருக்கிறோம்" என்றனர்.

பிரவீன்குமார்
பிரவீன்குமார்

மேலும், ``போதைக்கு அடிமையாகும் இளைஞர்களில் சிலர் உடல்வலி நிவாரண மாத்திரைகள், குழந்தைப்பேறு சமயத்தில் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்திவருகின்றனர். இந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது உடலிலுள்ள பாகங்களில் பாதிப்பு ஏற்படும். டாக்டர்களின் பரிந்துரையில்லாமல் யாரும் மாத்திரைகளை உபயோகப்படுத்தக் கூடாது. ஊசி மூலம் இது போன்ற மாத்திரைகளை உடலில் ஏற்றிக்கொள்ளும்போது குறுகியகாலத்தில் இளைஞர்கள் உயிரிழக்க நேரிடும். எனவே போதைக்காக உடல்வலி நிவாரண மாத்திரைகள் என எந்த மாத்திரையையும் பயன்படுத்தக் கூடாது" என்றனர்.