Published:Updated:

டெல்லி: புதரில் ரத்தம் தோய்ந்த பை... உள்ளே துண்டிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள்! -போலீஸ் தீவிர விசாரணை

குற்றம்

சம்பவ இடத்துக்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள் மனித உடல் பாகங்களுடன் இருந்த அந்தப் பையை மீட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பியிருக்கின்றனர்.

டெல்லி: புதரில் ரத்தம் தோய்ந்த பை... உள்ளே துண்டிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள்! -போலீஸ் தீவிர விசாரணை

சம்பவ இடத்துக்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள் மனித உடல் பாகங்களுடன் இருந்த அந்தப் பையை மீட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பியிருக்கின்றனர்.

Published:Updated:
குற்றம்

டெல்லி போலீஸார் நேற்றைய தினம் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கல்யாண்புரி பகுதியில் உள்ள ராம்லீலா மைதானத்தின் புதர் பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக, அவர்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து ரோந்து பணியில் இருந்தவர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்திருக்கின்றனர்.

அந்த குறிப்பிட்ட புதர் பகுதியில் சோதனையிட்டபோது, ரத்தம் தோய்ந்த பை ஒன்று கிடந்திருக்கிறது. கடும் துர்நாற்றம் வீசிய அந்தப் பையை போலீஸார் பிரித்துப்பார்த்தபோது, அதில் துண்டிக்கப்பட்ட மனித உடலின் பாகங்கள் இருந்திருக்கின்றன. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ்
போலீஸ்

சம்பவ இடத்துக்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள் மனித உடல் பாகங்களுடன் இருந்த அந்தப் பையை மீட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பியிருக்கின்றனர். இது தொடர்பாக அந்தப் பகுதி போலீஸார் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த உடல் பாகங்கள் மிகக் கொடூரமான முறையில் துண்டிக்கப்பட்டிருப்பதால், அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக போலீஸார் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism