Published:Updated:

வேறு பெண்ணுடன் இருந்ததைத் தட்டிக்கேட்ட மனைவி - காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற சினிமா தயாரிப்பாளர்!

தயாரிப்பாளர் மிஸ்ரா, அருகில் கண்காணிப்பு கேமரா பதிவு

காரில் வேறு ஒரு பெண்ணுடன் இருந்ததைத் தட்டிக்கேட்ட மனைவிமீது காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற பாலிவுட் தயாரிப்பாளர் தலைமறைவாகிவிட்டார்.

பாலிவுட் படத் தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா. மும்பை அந்தேரி மேற்குப் பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்துவருகிறார். மிஸ்ரா, தான் வசிக்கும் கட்டடத்தின் கார் பார்க்கிங் பகுதியிலிருந்து காரை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாரானார். அந்த நேரத்தில் அவரின் மனைவி மிஸ்ராவைத் தேடி கார் பார்க்கிங் பகுதிக்கு வந்தார். மிஸ்ரா காரை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாரானார். காரில் வேறு ஒரு பெண் இருந்தார். அங்கு வந்த மிஸ்ராவின் மனைவி, காரில் வேறு ஒரு பெண் இருப்பதைப் பார்த்து தன் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்லும் மனநிலையில் இருந்த மிஸ்ரா காருடன் வேகமாகப் புறப்பட முயன்றார்.

வேறு பெண்ணுடன் இருந்ததைத் தட்டிக்கேட்ட மனைவி - காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற சினிமா தயாரிப்பாளர்!

இதில் மிஸ்ராவின் மனைவி காரில் அடிபட்டுக் கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் மிஸ்ராவின் மனைவிக்கு கால் கை, தலையில் காயம் ஏற்பட்டது. எனினும், சம்பவ இடத்திலிருந்து மிஸ்ரா காரில் தப்பிச்சென்றுவிட்டார். காயமடைந்த மிஸ்ராவின் மனைவி இது குறித்து அம்போலி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அதில் மிஸ்ராவின் மனைவி கார் இடித்து கீழே விழுவது தெளிவாகப் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கமல் கிஷோர் மிஸ்ரா மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்திருப்பதால் மிஸ்ரா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர். மிஸ்ரா, `தேஹாட்டி டிஸ்கோ’ என்ற இந்திப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.