Published:Updated:

மனைவியை கார் ஏற்றி கொல்ல முயற்சி; பாலிவுட் தயாரிப்பாளர் கைது!

மிஸ்ரா

மிஸ்ரா தனது கட்டடத்தின் கார் பார்கிங் பகுதியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு வெளியில் புறப்படத் தயாரானார். அந்நேரம் அவரின் மனைவி யாஸ்மின், மிஸ்ராவை காண கார் பார்க்கிங் பகுதிக்கு வந்தார். காரில் கிஷோருடன் வேறொரு பெண் இருந்தார்.

மனைவியை கார் ஏற்றி கொல்ல முயற்சி; பாலிவுட் தயாரிப்பாளர் கைது!

மிஸ்ரா தனது கட்டடத்தின் கார் பார்கிங் பகுதியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு வெளியில் புறப்படத் தயாரானார். அந்நேரம் அவரின் மனைவி யாஸ்மின், மிஸ்ராவை காண கார் பார்க்கிங் பகுதிக்கு வந்தார். காரில் கிஷோருடன் வேறொரு பெண் இருந்தார்.

Published:Updated:
மிஸ்ரா

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா, சில படங்களை தயாரித்து இருக்கிறார். அவர் தன் மனைவியோடு மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் இருக்கும் அம்போலியில் தங்கி இருக்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, மிஸ்ரா தனது கட்டடத்தின் கார் பார்கிங் பகுதியில் இருந்து காரை எடுத்துக் கொண்டு வெளியில் புறப்படத் தயாரானார். அந்நேரம் அவரின் மனைவி யாஸ்மின், மிஸ்ராவை காண கார் பார்க்கிங் பகுதிக்கு வந்தார். காரில் கிஷோருடன் வேறு ஒரு பெண் இருந்தார்.

அதை பார்த்து அதிர்ந்த அவர், தனக்கு துரோகம் செய்வதாக மிஸ்ராவிடம் யாஸ்மின் சண்டையிட்டார். இந்த சண்டையில் சம்பவ இடத்தில் இருந்து மிஸ்ரா காரில் கிளம்பிச் சென்றார். அப்படி செல்லும்போது மிஸ்ரா தனது காரால் தனது மனைவியை இடித்துத் தள்ளிவிட்டுச் சென்றார். அதோடு மனைவியின் காலிலும் கார் ஏறிச்சென்றது. கார் இடித்து கீழே விழுந்ததில் கை, கால், தலையில் காயம் ஏற்பட்டது.

மனைவியுடன் மிஸ்ரா
மனைவியுடன் மிஸ்ரா

உடனே மிஸ்ராவின் மனைவி, இது குறித்து அம்போலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் அக்கட்டடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மிஸ்ரா மனைவி சொல்வது உண்மைதான் என்பதை உறுதி செய்த போலீஸார், உடனே மிஸ்ரா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். மிஸ்ராவின் மனைவி இரண்டு காலிலும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸார் மிஸ்ராவை அவரது வீட்டில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார். உடனே அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நாளை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.