Published:Updated:

`உறவினரைப் பழிவாங்க முதல்வர், துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்!'- முன்னாள் அதிமுக பிரமுகர் கைது

உறவினர் பெண்ணைப் பழிவாங்குவதற்காக, கோவையில் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

மிரட்டல்
மிரட்டல்

கோவை செட்டிபாளையம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா (42). இவர் தன் உறவினர் பெண்ணான பார்வதியிடம் ஒன்றரை லட்சம் பணம் கேட்டுள்ளார். ஆனால், பார்வதி பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பார்வதியைப் பழிவாங்குவதற்கு சகுந்தலா திட்டம் போட்டுள்ளார்.

சகுந்தலா
சகுந்தலா

இதற்காக, தமிழக துணை முதல்வர் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட சகுந்தலா, தனது உறவினர் பெண் பார்வதி பெயரில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் இல்லங்களில் மனித வெடிகுண்டு ஆட்களை வைத்திருப்பதாகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து செல்போன் எண்களை ஆராய்ந்த சைபர் கிரைம் போலீஸார், செட்டிபாளையம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், பார்வதியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

முதல்வர், துணை முதல்வர்
முதல்வர், துணை முதல்வர்

அப்போது, பணம் தராததால் தனது பெயரில் சகுந்தலா இவ்வாறு மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

பார்வதி கொடுத்த புகாரின் பேரில், போலீஸார், சகுந்தலாவை கைது செய்து விசாரணை நடத்தினர். சகுந்தலா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையிலடைத்தனர்.

சகுந்தலா
சகுந்தலா

கைது செய்யப்பட்டுள்ள சகுந்தலா, 1993 -2005 வரை அ.தி.மு.க-வில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய மகளிரணி தலைவி பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சமீப காலமாக அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.