Published:Updated:

`டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டவை ஷ்ரத்தாவின் எலும்புகள்தானா?!’ - டிஎன்ஏ முடிவுகள் சொல்வதென்ன?

அஃப்தாப் - ஷ்ரத்தா

டெல்லியில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கிடைத்த எலும்புப் பகுதிகள் ஷ்ரத்தாவுடையவைதான் என டி.என்.ஏ. பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது.

`டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டவை ஷ்ரத்தாவின் எலும்புகள்தானா?!’ - டிஎன்ஏ முடிவுகள் சொல்வதென்ன?

டெல்லியில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கிடைத்த எலும்புப் பகுதிகள் ஷ்ரத்தாவுடையவைதான் என டி.என்.ஏ. பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது.

Published:Updated:
அஃப்தாப் - ஷ்ரத்தா

டெல்லியில், கடந்த மே மாதம் ஷ்ரத்தா என்ற பெண் தன் காதலன் அஃப்தாப் பூனாவாலா என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். இருவரும் டெல்லியில் வாடகை வீடு எடுத்துத் தங்கியிருந்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஷ்ரத்தாவைக் கொலைசெய்து 35 துண்டுகளாக வெட்டி வனப்பகுதியில் வீசிச் சென்றார் அஃப்தாப். போலீஸார் தீவிர விசாரணை நடத்தி  அஃப்தாப்பைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி டெல்லி மெக்ரவுரி வனப்பகுதியிலிருந்து எலும்புத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை ஷ்ரத்தாவுக்குரியதா என்பதை உறுதிசெய்ய போலீஸார் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். டி.என்.ஏ சோதனை முடிவுகள் தற்போது கிடைத்திருக்கின்றன.

அதில் `டி.என்.ஏ மாதிரிகள் ஷ்ரத்தாவின் டி.என்.ஏ அவரின் தந்தையின் டி.என்.ஏ-வோடு ஒத்துப்போகிறது' என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இந்த வழக்கில் இது முக்கியப் புள்ளியாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே கொலை செய்த பிறகு உடலைப் பல துண்டுகளாக வெட்டப் பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு அஃப்தாப்பும்தான் தான் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அந்த வாக்குமூலத்தை சாட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். அதோடு அஃப்தாப்புக்கு உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. அவற்றை சாட்சியமாக தாக்கல் செய்ய முடிவு செய்திருக்கின்றனர். ஷ்ரத்தாவைக் காணவில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் அவரின் நண்பர்கள் ஷ்ரத்தாவின் தந்தையிடம் தெரிவித்தனர்.

பூனாவாலா-ஷ்ரத்தா
பூனாவாலா-ஷ்ரத்தா

இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் ஷ்ரத்தாவின் தந்தை மகாராஷ்டிராவில் நாலாசோபாரா போலீஸாரிடம் புகார் செய்தார். ஆனால், போலீஸார் இது குறித்து சரியாக விசாரிக்கவில்லை என்று ஷ்ரத்தாவின் தந்தை தெரிவித்திருக்கிறார். ஷ்ரத்தாவும் அஃப்தாப்பும் மும்பையில் சேர்ந்து வாழ்ந்தபோதும் தன்னை அஃப்தாப் அடித்து உதைப்பதாக ஷ்ரத்தா போலீஸில் புகார் செய்தார். ஆனால் போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதை போலீஸார் சரியாக விசாரித்திருந்தால் தன் மகளைக் காப்பாற்றியிருக்கலாம் என்று வால்கர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.