Published:Updated:

மகனிடம் சண்டை... சிறுவனைக் கண்டித்த தந்தை! - ஆத்திரத்தில் அவர் மகனை மூழ்கடித்துக் கொன்ற சிறுவன்

சிவகாசி
News
சிவகாசி

விருதுநகரில் தன் மகனுடன் சண்டைபோட்ட சிறுவனை தந்தை கண்டித்த நிலையில், கோபத்தில் அதற்குப் பழியாக மகனுக்கு நீச்சல் கற்றுத்தருவதாகச் சொல்லி குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரத்தைச் சேர்ந்தவர் சேசு. இவரின் 9 வயது மகன் விஜய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்தப் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 26-ம் தேதி பக்கத்து தெருவில் விளையாடச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதையடுத்து, தன் மகனைக் காணவில்லை என சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சேசு. சிறுவன் விஜய்யை போலீஸார் தேடிவந்தனர்.

சிவகாசி நகர் காவல் நிலையம்
சிவகாசி நகர் காவல் நிலையம்

இந்நிலையில், சித்துராஜபுரத்துக்கும் விஸ்வநத்தத்துக்கும் இடையிலுள்ள கிணற்றில் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. இந்த நிலையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்ட குளத்துக்குச் செல்லும் வழியிலுள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதில், சிறுவன் காணமல்போனதாகக் கூறப்பட்ட நாளில் விஜய்யுடன் ஒரு சிறுவன் திண்பண்டம் சாப்பிட்டுக்கொண்டே நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்தச் சிறுவன், சிவகாசியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்திருக்கிறார். இதையடுத்து அந்த சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ``விஜய்யும் நானும் சண்டைபோட்டோம். அதுல அவனை நான் அடிச்சுட்டேன்.

சிவகாசி
சிவகாசி

நான் அடிச்சதை அவங்க அப்பாகிட்ட சொல்லிட்டான். அதுக்காக அவன் அப்பா சேசு, என்னைச் சத்தம்போட்டு அடிச்சார். கோவத்துல, விஜய்க்கு நீச்சல் சொல்லித் தர்றேன்னு சொல்லி கிணத்துக்குக் கூட்டிட்டுப் போயி தள்ளிவிட்டேன்” எனச் சொல்லியிருக்கிறான் அந்தச் சிறுவன். இதையடுத்து அந்தச் சிறுவனை கைதுசெய்த போலீஸார், சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.