Published:Updated:

வேலூர்: காளை மாடு முட்டியதில் சிறுவன் பலி! - விழா ஏற்பாட்டாளர்கள் 4 பேர் கைது

மிரண்டு ஓடிய மாடு

அனுமதியின்றி நடத்தப்பட்ட எருது விடும் விழாவில், காளை மாடு முட்டியதில் 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

வேலூர்: காளை மாடு முட்டியதில் சிறுவன் பலி! - விழா ஏற்பாட்டாளர்கள் 4 பேர் கைது

அனுமதியின்றி நடத்தப்பட்ட எருது விடும் விழாவில், காளை மாடு முட்டியதில் 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Published:Updated:
மிரண்டு ஓடிய மாடு

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள கள்ளிச்சேரி கிராமத்தில் நேற்று அனுமதியின்றி எருது விடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்ப்பதற்காக சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் அங்குக் கூடியிருந்தனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் காளை மாடுகளை அதன் உரிமையாளர்கள் கூட்டத்தின் நடுவே அவிழ்த்துவிட்டதால், மிரண்டு ஓடிய மாடுகள் கூடியிருந்த பார்வையாளர்களை முட்டித் தூக்கி வீசின. தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினர், விழாவை நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர். விழாக் குழுவினர் மறியலில் ஈடுபடப் போவதாக மிரட்டியதையடுத்து, வருவாய்த் துறையினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த சிறுவன்
உயிரிழந்த சிறுவன்

கூட்டத்தின் நடுவில் அவிழ்த்து விடப்பட்ட காளை மாடு ஒன்று முட்டியதில் மிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தந்தையை இழந்த 13 வயது சிறுவன் கிருஷ்ணா பலத்த காயமடைந்து சுருண்டு விழுந்தான். அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் வீடுத் திரும்பிய சிறுவன் இன்று காலை சுயநினைவு இழந்துக் காணப்பட்டான். பதறிய உறவினர்கள் மீண்டும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்தப் புகாரின்பேரில், அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய கள்ளிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வேதாச்சலம் (42), சூரவேல் (47), சக்கரை (69), லோகநாதன் (47) ஆகிய நான்குப் பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாட்டின் உரிமையாளர் தினேஷ் உட்பட மேலும் நான்குப் பேரை தேடிவருகிறார்கள். 8 பேர்மீதும் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism