Published:Updated:

பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.35 லட்சத்தை கேஷுவலாக திருடிச் சென்ற 12 வயது சிறுவன்?! - வெளியான வீடியோ

பாட்டியலா வங்கி ( ட்விட்டர் )

பாட்டியலாவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் பட்டப்பகலில் கொள்ளையடித்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவிலுள்ள எஸ்பிஐ வங்கியிலிருந்து 10-12 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன், வங்கிக்குள் நுழைந்து, ரூ.35 லட்சம் பணக்கட்டுகள் அடங்கிய பையைத் தூக்கிச் சென்றிருக்கும் சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பான காட்சிகள் வங்கியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து நெட்டிசன்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த வீடியோவில், பாட்டியாலாவிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் 12 வயது சிறுவன் ஒருவர் காலை 11:30 மணியளவில் வங்கிக்குள் நுழைந்து அந்த வங்கியை சுற்றுமுற்றும் பார்க்கிறார். இங்கு அமைந்துள்ள ஏ.டி.எம்-மில் பணம் வைப்பதற்காக வங்கி ஊழியர்கள் வந்திருந்தனர். ஏடிஎம்-மில் டெபாசிட் செய்வதற்காக வங்கி அதிகாரிகள் சுமார் 35 லட்சம் ரூபாய் கொண்ட பையை கேஷ் கவுன்ட்டரில் வைத்திருந்தனர். அப்போது ரூ.35 லட்சம் பணம் இருந்த பையை எடுத்துக்கொண்டு, யாரும் பார்க்காத சமயத்தில் அந்தச் சிறுவன் வெளியேறுகிறார். இது தொடர்பாக போலீஸாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்தக் கொள்ளைக் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதால், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால் இந்தச் சம்பவம் நடந்ததாகக் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!