Published:Updated:

குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்ததால் மாணவன் மரணம்! - விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்

மரணம் ( சித்திரிப்புப் படம் )

திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சுமார் 20 நாள்களாக சிகிச்சையிலிருந்த மாணவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்ததால் மாணவன் மரணம்! - விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்

திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சுமார் 20 நாள்களாக சிகிச்சையிலிருந்த மாணவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Published:Updated:
மரணம் ( சித்திரிப்புப் படம் )

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை அடுத்த நுள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். வெளிநாட்டில் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவர் மகன் அஸ்வின் (11), அதங்கோடு பகுதியிலிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி பள்ளிக்குச் சென்று காலாண்டு தேர்வு எழுதவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறார். மறுநாளான 25-ம் தேதி அஸ்வினுக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. அவர் தாயார் ஷோபியா களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அஸ்வினை அழைத்துச் சென்றிருக்கிறார். இரண்டு நாள்கள் அந்த மருத்துவமனையில் சிகிச்சைபெற்றும் உடல்நிலை சரியாகவில்லை. மேலும் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளால் மாணவன் அவதிப்பட்டிருக்கிறான். அதைத் தொடர்ந்து கேரளா மாநிலம், நெய்யாற்றிங்கரை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டான். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஆசிட் திரவம் குடித்ததாகவும், அதனால் குடல் பகுதி முழுவதும் புண்ணாகிவிட்டதாகவும், இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

ஆசிட்
ஆசிட்
மாதிரி போட்டோ

மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் அஸ்வினிடம் அதுபற்றி கேட்டிருக்கிறார். பள்ளியில் காலாண்டு தேர்வு எழுதியபின்பு, டாய்லெட் சென்றுவிட்டு வீடு திரும்பியதாகவும், வழியில் அந்தப் பள்ளியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஒரு மாணவன் குளிர்பானம் கொடுத்தாகவும் கூறியிருக்கிறான். மேலும், அந்த குளிர்பானத்தை குடித்தபோது சுவை வேறு மாதிரியாக இருந்தது எனவும், அந்த சமயத்தில் வேறு சில மாணவர்கள் விளையாடிவிட்டு தன் மீது மோதியதால் ஜூஸ் கீழே விழுந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறான். அதன் பின்னர்தான் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் சொல்லியிருக்கிறான். இது பற்றி வீட்டில் சொன்னால் திட்டுவார்கள் என்பதால் சொல்லாமல் மறைத்ததாகவும் கூறியிருக்கிறான்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் களியக்காவிளை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஸ்வின் பள்ளியில் முதல் ரேங்க் வாங்கும் மாணவன் என்பதால் படிப்பு சம்பந்தமான பொறாமை காரணமாக குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சுமார் 20 நாள்களாக சிகிச்சையிலிருந்த மாணவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவனுக்கு ஜூஸ் கொடுத்த மற்றொரு மாணவனை அடையாளம் தெரியும் என்பதால் பள்ளியிலிருந்து பல மாணவர்களின் போட்டோக்கள் போலீஸ் வசம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த போட்டோக்களைப் பார்த்து ஜூஸ் கொடுத்த மாணவனை அஸ்வினால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவன் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது பற்றி குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி ஹரிகிரண் பிரசாத், ``பள்ளி மாணவர்கள் சம்பந்தமான பிரச்னைகள் குறித்து கையாள சில வழிகாட்டுதல்களை ஐகோர்ட் தெரிவித்திருக்கிறது. அதடிப்படையில் மாணவன் வழக்கு குறித்த தகவல்கள் டி.ஜி.பி-க்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது" என்றார்.