Published:Updated:

திருச்செந்தூர்: பேச மறுத்த காதலி... காதலனால் நேர்ந்த கொடூரம்!

திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையம்

தூத்துக்குடியில் பேச மறுத்த காதலியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துவிட்டு காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்செந்தூர்: பேச மறுத்த காதலி... காதலனால் நேர்ந்த கொடூரம்!

தூத்துக்குடியில் பேச மறுத்த காதலியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துவிட்டு காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வனசந்தியா. இவர், உடன்குடி அருகில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான கார்த்திக் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் வனசந்தியாவின் தந்தைக்குத் தெரியவந்ததும், வனசந்தியாவை அவரின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து வனசந்தியா, கார்த்திக்கிடம் கடந்த ஒரு மாதமாக பேசுவதைத் தவிர்த்துவந்தார். இந்த நிலையில், கோபமடைந்த கார்த்திக், வனசந்தியாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

கார்த்திக்
கார்த்திக்

பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் வனசந்தியா மட்டும் தனியாக இருந்திருக்கிறார். ”என்கிட்ட ஏன் பேசுறதை நிறுத்திட்டே?” எனச் சொல்லி தன்னிடம் பேசுமாறு வனசந்தியாவை வற்புறுத்தியிருக்கிறார். ”என்னை மறந்துடு. இனிமேல் என்கிட்டப் பேச வேண்டாம். என்னைத் தொந்தரவு செய்யாதே. வீட்டுல இருந்து வெளியே போ” எனச் சொல்லி வீட்டின் கதவை மூட முயன்றிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வனசந்தியாவின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் பலத்த காயமடைந்த வனசந்தியா, வலி தாங்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து சத்தம் போட்டிருக்கிறார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையே தனது வீட்டுக்குச் சென்ற கார்த்திக், வீட்டிலுள்ள அறையின் கதவைப் பூட்டிவிட்டு மின்விசிறியில் கயிற்றால் தூக்கு மாட்டியிருக்கிறார்.

கத்தி
கத்தி

இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக கார்த்திக்கை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த ச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். பேச மறுத்ததால், கத்தியால் காதலியின் கழுத்தை அறுத்ததுடன், காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.