Published:Updated:

மகளைப் போன்று வேடம்... பிரேசில் கேங்ஸ்டரின் பக்கா பிளான் - அலர்ட்டான போலீஸ்!

ராம் பிரசாத்

சிறையில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டிய பிரேசில் கைதியின் முயற்சியைக் காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

 பிரேசில் கேங்ஸ்டர் சில்வா
பிரேசில் கேங்ஸ்டர் சில்வா

பிரேசிலைச் சேர்ந்த கிளாவினா டா சில்வா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கேங்ஸ்டரான சில்வா தற்போது பிரேசில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரேசில் இருக்கும் ரெட் காமாண்ட் என்ற கும்பலின் தலைவன்தான் இந்த சில்வா. இந்தக் கும்பல் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, போதைப் பொருள்களை சப்ளை செய்து வருகின்றனர். பிரேசிலில் கடற்கரையோர நகரங்களின் வசிக்கும் ஏழைகளை மூளை சலவை செய்து போதைப் பொருள்களை சப்ளை செய்ய பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

முக மூடி, உடை
முக மூடி, உடை

சில்வாவுக்கு 19 வயதில் மகள் இருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில்வாவை அவர் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். கடத்தல்காரர் மூளை சிறைக்குள் சும்மா இருக்குமா. சிறையில் இருந்து தப்பித்துவிட எண்ணிய சில்வா. கேங்ஸ்டர் லெவலுக்குத் திட்டம் தீட்டியுள்ளார். தன்னை மகள் சிறையில் சந்திக்க வரும்போது மகளைப்போல வேடமணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முடிவு செய்துள்ளார். இதற்காகப் பெண் போன்ற உடை மற்றும் முக மாஸ்க் ஆகியவற்றைத் தன்னுடைய செல்வாக்கின் மூலம் சிறைக்குள் வரவழைத்துள்ளார்.

சில்வாவைக் காண அவரின் மகள் வந்து காத்துக்கொண்டிருந்த வேளையில் சிறையில் இருந்து வெளியேற முயன்றுள்ளார். பெண் போன்று உடை அணிந்து சிறைச்சாலையின் வரவேற்பு பகுதிக்கு வந்துள்ளார். சில்வாவின் நடத்தையில் சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சில்வாதான் என்பதைக் காவலர்கள் உறுதிசெய்தனர்.

சில்வா
சில்வா

இதையடுத்து சில்வாவின் பெண் வேடத்தைக் களைத்த போலீஸார் அதை வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில்வா தற்போது அதிக பாதுகாப்பு கொண்ட மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய சிறை அதிகாரிகள், ‘சில்வா காலையிலிருந்து பதற்றமாகவே இருந்தார். அதனால் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இதன்காரணமாகவே அவர் பிடிபட்டுள்ளார்’ என்றனர்.