Published:Updated:

​கம்பம்: அடித்துக் கொல்லப்பட்ட ரொட்டி வியாபாரி; மூவரை விசாரிக்கும் போலீஸ்! - என்ன நடந்தது?

கொலை

கம்பம் அருகே ரொட்டி வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

​கம்பம்: அடித்துக் கொல்லப்பட்ட ரொட்டி வியாபாரி; மூவரை விசாரிக்கும் போலீஸ்! - என்ன நடந்தது?

கம்பம் அருகே ரொட்டி வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை

​தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுருளிவேல் (52). இவருக்குத் திருமணம் முடிந்து மனைவி, மகன், மகள் இருக்கின்றனர்.​ ​சுருளிவேல் ட்ரை-சைக்கிள்​ வைத்து பன் ரொட்டி, கேக் போன்ற ​திண்பண்டங்களை கம்ப​த்தில் வி​யாபாரம் செய்துவந்தார்.​​

சுருளிவேல்
சுருளிவேல்

​இந்த நிலையில், ​​நேற்​று இரவு வழக்கம்போல் கம்பம் மெட்டு காலனி​ ​பகுதியில் வியாபாரம் செய்துகொண்டிருந்த​போது​போதையில் இருந்த சிலர் ​உரிய பணம் கொடுக்காமல் பன்​ ​ரொட்டி கேட்டிருக்கின்றனர். சுருளிவேல் தர மறுத்ததால்​ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். வாக்குவாதம் முற்றியதால் அருகே இருந்த கட்டைகளை எடுத்து சுருளிவேலைத்​ தாக்கியிருக்கின்றனர். இதில் ​மண்டை உடைந்து ​அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சுருளிவேல் கீழே சரிந்து உயிரிழந்தார்.

அந்தப் பகுதி மக்கள் அளித்த ​தகவ​லின்பேரில், கம்பம் வடக்கு ​போலீஸார் கொலை​யான சுருளிவேல்​​ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ​அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து, நிகழ்விடம் அருகே சந்தேகத்துக்கு​ரிய வகையில் சுற்றிய மூன்று பேரைப் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தாக்குதல்
தாக்குதல்

மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் இடத்தில் ரொட்டி வியாபாரி சரமாரியாக அடித்துக் கொ​லைசெய்ய​​ப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.