Published:Updated:

சரமாரியாக வெட்டிய கும்பல்; ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியான பிரியாணி கடை உரிமையாளர் - போலீஸ் விசாரணை

சென்னை இளைஞர் கொலை

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பிரியாணிக்கடை உரிமையாளர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

சரமாரியாக வெட்டிய கும்பல்; ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியான பிரியாணி கடை உரிமையாளர் - போலீஸ் விசாரணை

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பிரியாணிக்கடை உரிமையாளர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

Published:Updated:
சென்னை இளைஞர் கொலை

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாகூர் கனி. இவருக்குத் திருமணமாகி கதீஜா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளுக்கும் இருக்கிறார்கள். இவர், கடந்த இரண்டு வருடங்களாக அயனாவரம் பகுதியில் பிரியாணி கடையை நடத்திவருகிறார். நாகூர் கனி மீது பல குற்ற வழக்குகளும், அடிதடி வழக்குகளும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொலை செய்யப்பட்ட நாகூர் கனி
கொலை செய்யப்பட்ட நாகூர் கனி

நேற்று (02.11.2022) நாகூர் கனி வழக்கம்போல தனது பிரியாணிக் கடை வாசலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு மூன்று பைக்குகளில் வந்த ஐந்து மர்ம நபர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் நாகூர் கனியைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். படுகாயமடைந்த நாகூர் கனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மக்கள் அதிகம் நடமாடும் சாலையில் நடந்த இந்த படுகொலை சம்பவத்தால் அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸார் நாகூர் கனியின் உடலைக் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட நாகூர் கனி
கொலை செய்யப்பட்ட நாகூர் கனி

கொலையாளிகள் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவர்களின் முகத்தை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், கொலையாளிகள் பயன்படுத்திய வாகனத்தின் எண்களைக் கொண்டு அவர்களைத் தேடும் பணி தொடங்கியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா இல்லை வேறு ஏதேனும் காரணமாக என்று வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாணி கடை உரிமையாளர் கடை வாசலிலேயே கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.