Published:Updated:

``கொடுத்த பணத்தைக் கேட்டா, என்னையவே திட்டுறியா?" - நண்பனைக் கொலைசெய்த சகோதரர்கள்

கொலை

பணத் தகராறில் நண்பனைக் கொலைசெய்த சகோதரர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

``கொடுத்த பணத்தைக் கேட்டா, என்னையவே திட்டுறியா?" - நண்பனைக் கொலைசெய்த சகோதரர்கள்

பணத் தகராறில் நண்பனைக் கொலைசெய்த சகோதரர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கொலை

புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு அம்மாபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் இப்ராம்ஷா, சேட்டு. இருவரும் சகோதரர்கள். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரஜாக். இப்ராம்ஷா கூலி வேலை செய்வதுடன் அவ்வப்போது, கடல் தொழிலுக்கும் சென்றுவந்திருக்கிறார். அவர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், இப்ராம்ஷா தன் நண்பரான ரஜாக்குக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு 6,000 ரூபாய் கடனாகக் கொடுத்திருக்கிறார். ரஜாக் டீ மாஸ்டராக வேலை செய்துவந்தார். குறித்த நேரத்தில் பணத்தை இப்ராம்ஷாவுக்கு, ரஜாக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை தொலைபேசியில் ரஜாக்கைத் தொடர்புகொண்டபோதும், கொடுக்க மறுத்திருக்கிறார். ஒருகட்டத்தில் ரஜாக், கொடுத்த பணத்தைக் கேட்ட இப்ராம்ஷாவைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.


உடனே, இப்ராம்ஷா, தன் தம்பி சேட்டுவிடம் இது குறித்து ஆலோசனை கேட்க, இருவரும் சேர்ந்து ரஜாக்கைத் தீர்த்துக்கட்ட முடிவுசெய்திருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு இருவரும் ரஜாக்குக்கு போன் செய்து, பணமெல்லாம் இப்போ தர வேண்டாம் எனவும்,ம் மது அருந்துவதற்காக மணமேல்குடியிலுள்ள ஒரு பாருக்கு வரும்படியும் சொல்லியிருக்கின்றனர். அங்கு வந்த ரஜாக்குக்கு மது வாங்கிக் கொடுத்ததோடு, மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஒரே வண்டியில் மூன்று பேரும் ஊருக்குச் சென்றிருக்கின்றனர். திடீரென இடையில் ரஜாக்கை இறக்கிவிட்ட சகோதரர்கள், அவருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

சேட்டு
சேட்டு

``பணத்தை திருப்பிக் கேட்டால் வீட்டை இழுத்து தகாத வார்த்தைகளால் திட்டுவியா... பணம் நான் கொடுத்தேனா இல்லை நீ கொடுத்தியா... உன்னைக் கொலைசெய்வதற்காகத்தான் இங்கு அழைத்து வந்தோம்" என்று சொல்லி மாறி மாறி இருவரும் சேர்ந்து ரஜாக்கைத் தாக்கியிருக்கின்றனர். தொடர்ந்து பிளேடால் ரஜாக்கின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்து
சடலத்தை அருகிலிருந்த குளத்தில் வீசிச் சென்றிருக்கின்றனர்.  
இது தொடர்பாக, வழக்கு பதிவுசெய்து விசாரித்தவந்த மணமேல்குடி போலீஸார், ரஜாக்கின் தொலைபேசியைக் கைப்பற்றி, சோதனை செய்தபோது, பதினைந்து முறைக்கும் மேல் இப்ராம்ஷாவின் நம்பரில் போன் வந்தது தெரியவந்தது. இதற்கிடையே, இப்ராம்ஷா தலைமறைவாகினார். இதையடுத்து, அவர் தம்பி சேட்டுவைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, ``கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டியதால், அவரைக் கொலைசெய்தோம்" என்று ஒப்புக்கொண்டார். அதையடுத்து கொலை வழக்காக பதிவுசெய்த போலீஸார் சேட்டைக் கைதுசெய்திருக்கின்றனர். மேலும், இப்ராம்ஷாவைத் தேடிவருகின்றனர்.

இந்தச் சம்பவம் மணமேல்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.