Published:Updated:

சக வீரரைக் கொன்ற ராணுவ வீரர், தன்னை தானே சுட்டுத் தற்கொலை!

மரணம்

கடந்த திங்கள்கிழமை தன் சக ஊழியரைக் கொன்ற எல்லைப் பாதுகாப்பு வீரர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

சக வீரரைக் கொன்ற ராணுவ வீரர், தன்னை தானே சுட்டுத் தற்கொலை!

கடந்த திங்கள்கிழமை தன் சக ஊழியரைக் கொன்ற எல்லைப் பாதுகாப்பு வீரர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

Published:Updated:
மரணம்

இந்தியா - வங்கதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்த எல்லைப் பாதுகாப்பு வீரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ராணுவத் தரப்பில் வெளியான தகவலில், ``கொல்கத்தாவிலிருந்து சுமார் 230 கி.மீ தொலைவில் துணை ராணுவப் படையின் பெர்ஹாம்பூர் செக்டரின் கீழ் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இந்த முகாம் அமைந்துள்ளது.

 எல்லைப்படை வீரர்கள்
எல்லைப்படை வீரர்கள்

தலைமை வீரர் ஜான்சன் டெப்போ மற்றும் மற்றொரு வீரர் எஸ்.ஜி. சேகர் இருவரும் படையின் 117-வது படையைச் சேர்ந்தவர்கள். எல்லையில் இரவுப் பணியை முடித்து விட்டு அவர்களின் இருப்பிடம் திரும்பிய பின்பு அவர்களுக்கு இடையில் எதோ தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

அதன் பின்புதான் ஜான்சன் சேகரைத் தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை தன் சக ஊழியரைக் கொன்ற எல்லைப் பாதுகாப்பு வீரர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துப்பாக்கி
துப்பாக்கி
மாதிரிப் படம்

கடந்த ஆண்டு எல்லையில் ஒரு விவசாயியை இருவரும் தடுத்து வைத்ததாகக் கூறப்படும் ஒரு வழக்கில் சம்மன் வந்த பின்பே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த சம்பவத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism