Published:Updated:

வெளியான மகளின் ஆபாச வீடியோ; கண்டிக்கச் சென்ற பாதுகாப்புப் படை வீரர் அடித்துக் கொலை! - போலீஸ் விசாரணை

க்ரைம்

குஜராத்தில், மகளின் ஆபாச வீடியோ வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாதுகாப்புப் படை வீரர், 15 வயது சிறுவனின் குடும்பத்தாரால் அடித்துக் கொலை.

வெளியான மகளின் ஆபாச வீடியோ; கண்டிக்கச் சென்ற பாதுகாப்புப் படை வீரர் அடித்துக் கொலை! - போலீஸ் விசாரணை

குஜராத்தில், மகளின் ஆபாச வீடியோ வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாதுகாப்புப் படை வீரர், 15 வயது சிறுவனின் குடும்பத்தாரால் அடித்துக் கொலை.

Published:Updated:
க்ரைம்

குஜராத்தில், தன்னுடைய மகள் தொடர்பான ஆபாச வீடியோ வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலின்படி கடந்த சனிக்கிழமையன்று, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் மகளின் ஆபாச வீடியோவை, சக்லசி கிராமத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆபாச வீடியோ
ஆபாச வீடியோ
மாதிரிப் படம்

மேலும் இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியும், சம்பந்தப்பட்ட சிறுவனும் ஒரே பள்ளியில் படித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், தன் மகள் தொடர்பான ஆபாச வீடியோ வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாதுகாப்புப் படை வீரர் அன்றிரவே தன்னுடைய மனைவி, இரண்டு மகன்களுடன் நேராக அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

பாதுகாப்பு படை வீரர் கொலை
பாதுகாப்பு படை வீரர் கொலை

அப்போது இரு குடும்பத்தாரும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில், சிறுவனின் குடும்பத்தினர் தாக்கியதில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். இதனை எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. அதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தற்போது வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.