Published:Updated:

புல்லி பாய் செயலி: குற்றம் சாட்டப்பட்டவருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் என்பது சரியா?

புல்லி பாய்

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ‘முதல் முறைக் குற்றவாளி’ என்பதால், ‘நீண்ட நாள்கள்’ சிறையிருப்புத் தண்டனை அவருக்கு உகந்ததாக இருக்காது என்கிறது நீதிமன்றம்.

புல்லி பாய் செயலி: குற்றம் சாட்டப்பட்டவருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் என்பது சரியா?

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ‘முதல் முறைக் குற்றவாளி’ என்பதால், ‘நீண்ட நாள்கள்’ சிறையிருப்புத் தண்டனை அவருக்கு உகந்ததாக இருக்காது என்கிறது நீதிமன்றம்.

Published:Updated:
புல்லி பாய்

சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களைத் திருடி, அவற்றைப் புல்லி பாய் (Bully Bai) என்ற செயலியில் இழிவாகச் சித்திரித்து வெளியிட்டு, 'ஏலத்தில் பங்கேற்கலாம்' என்ற சம்பவம் கடந்த ஜனவரி மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. பெண்களை ஏலம் விடுவதற்காக அல்ல, அவர்களை இழிவுபடுத்தித் துன்புறுத்துவதற்காகவே அந்த இளைஞர்கள் அந்த செயலியை உருவாக்கியிருந்ததாகக் கூறப்பட்டது. கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தச் செயலியை உருவாக்கிய ஓம்கரேஷ்வர் தாக்கூர் (25), நீரஜ் பிஷ்னோய் (20) என்ற இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தப் பின்னணியில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ‘முதல் முறைக் குற்றவாளி’ என்பதால், ‘நீண்ட நாள்கள்’ சிறையிருப்புத் தண்டனை அவருக்கு உகந்ததாக இருக்காது என்று கூறி, மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது டெல்லி நீதிமன்றம்.
நீரஜ்
நீரஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற சைபர் குற்றங்கள் பிரிவு வழக்கறிஞர் சத்யா நாராயணன் சுப்ரமணியன் பேசும்போது, “குற்றம்சாட்டப்பட்டவர் குற்றம் செய்ததற்கான உறுதிப்பாடு வரும்வரையில் அவருக்கு ஜாமீன் வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை. வழக்கு விசாரணைக்கான கால அவகாசம் முடிந்தவுடன்தான் சட்டப்படி குற்றத்தை நிரூபிக்க முடியும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மாணவர்களாக இருக்கும்பட்சத்தில் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையில் எந்த ஒரு ஐயமும் இல்லை. ஏனெனில் இந்திய அரசியலமைப்பைப் பொறுத்தவரையில் ‘கரெக்ட்டிவ் மெக்கானிசம்’ என்ற திருத்தமுறைச் செயல்பாட்டையே நாம் பின்பற்றி வருகிறோம். தவறு செய்தவர்களைத் திருத்த முயல்வதே நீதித்துறையின் முதல் கடமையாகும். இதனைத்தான் நாம் சீர்திருத்தம் என்கிறோம்” என்றார்.

இரண்டு நிகழ்வுகளிலும், உண்மையான ஏலம் என்று எதுவும் இல்லை என்றாலும், இதன் நோக்கம் இஸ்லாமியப் பெண்களை இழிவுபடுத்தி அவமானப்படுத்துவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்துப் பேசிய கவிஞர் குட்டிரேவதி, “நம் சமூகம் பெண்களிடத்தில் ஒருவித வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் சமூகமாய் இருந்துவருகிறது. குறிப்பிட்ட ஒரு சமூகத்துப் பெண்கள் மீது வெளிப்படுத்தப்படும் இந்த வன்மம் முதல் முறை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் தண்டனைக்குரியதே. படிக்கும் காலத்தில் சாதி-மத சர்ச்சைகளில் ஈடுபடுவதெல்லாம் இப்போதுதான் அரங்கேறுகின்றன. இளம்வயதினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நாட்டின் வளர்ச்சிப் பாதை மோசமான இலக்கை நோக்கிப் பயணிப்பதையே காட்டுகிறது. முளையிலேயே கிள்ளி வீசப்படவேண்டிய விஷயம் முளைத்து வெளிவருபவர்களிடத்தில் காணப்பட்டால் தக்க தண்டனை வழங்கி அவர்கள் செய்த தவற்றை உணரச்செய்வதே சரியான செயல்பாடாக இருக்கும். மேலும், குறிப்பிட்ட சமூகத்தினர் மீது தூண்டப்படும் இந்த வகை வெறுப்பானது வன்முறைக்கான ஊற்றுக்கண்ணாக மாறி பெரிய அளவில் சமூகப் பிளவை ஏற்படுத்தும். குற்றவாளிகள் செய்த தவற்றைவிட பெரிய தவறு அவர்களைத் தண்டிக்காமல் மன்னித்துவிடுவது” என்றார்.

குட்டிரேவதி
குட்டிரேவதி

குற்றவாளிகளைத் திருத்தி நல்வழிப்படுத்துதல் என்பதே அரசின் நடவடிக்கையாய் இருக்கட்டும். குற்றம் செய்பவர்களுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படை தெரியாது இருக்கும்போது தண்டனை வழங்குவதில் மட்டும் எதற்கு இந்த மனிதாபிமான அடிப்படை என்ற கேள்வியே இறுதியில் நம்முன் நிற்கிறது!

-சுபஸ்ரீ

(பயிற்சிப் பத்திரிகையாளர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism