Published:Updated:

`நெற்றியில் குண்டு: எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலம்’ - பீகாரில் இன்னொரு ஹைதராபாத் சம்பவம்

பீகாரில் எரிந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலை
கொலை

பீகார் மாநிலம் குகுதா கிராமத்தில் பெண் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றினர். இதுதொடர்பான தகவல் காட்டுத்தீயாக பரவ 100-க்கும் அதிகமான மக்கள் அங்கே குவிந்தனர். ஆனால், அவர்களால் இறந்தது யார் என அடையாளம் காண முடியவில்லை. பெண்ணின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை
கொலை

இதுகுறித்து பேசிய புக்சார் மாவட்ட காவல்துறையினர், ``புக்சார் மாவட்டம் குகுதா கிராமத்தில் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து (Idathi) காவல்நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் இருந்தது. பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகமாக இருக்கிறது. நெற்றியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து தோட்டா ஒன்றையும் சேகரித்துள்ளோம். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். பெண் ஒருவர் சடலமாக இருப்பதை கேள்விப்பட்டு 100-க்கும் அதிகமான கிராம மக்கள் குவிந்தனர். இருப்பினும் இறந்தது யார் என அடையாளம் காண முடியவில்லை.

`பைக் பஞ்சர்... ஸ்விட்ச் ஆஃப் ஆன போன்'- ஹைதராபாத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் மருத்துவர்!

இறந்தது இளம்பெண்ணா அல்லது சிறுமியா எனத் தெரியவில்லை. எந்தத் தடயமும் கிடைக்கக் கூடாது; அதேபோல் அடையாளம் தெரியக் கூடாது என்ற நோக்கத்தில் குற்றவாளிகள் செயல்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட உடலின் மேல்பகுதி மோசமாக எரிந்த நிலையில் உள்ளது. அதனால் அடையாளம் காண்பதில் சிரமமாக உள்ளது. விசாரணையை தொடங்கியுள்ளோம். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் முழுமையான தகவல்கள் தெரியவரும்” என்கின்றனர்.

கொலை
கொலை

இறந்தது, 20 வயதுக்குட்பட்ட பெண் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தடயவியல் சோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர்.