Published:Updated:

``பில்லி,சூனியம் வைத்து திருமணத்தை நிறுத்துகிறார்!" - தாயை சகோதரன், காதலியுடன் சேர்ந்து கொன்ற இளைஞர்

கொலை ( சித்திரிப்புப் படம் )

பில்லி,சூனியம் வைத்து தாய் தன்னுடைய திருமணத்தை நிறுத்துவதாக நினைத்த இளைஞர் அவரைக் கொலைசெய்தார்.

``பில்லி,சூனியம் வைத்து திருமணத்தை நிறுத்துகிறார்!" - தாயை சகோதரன், காதலியுடன் சேர்ந்து கொன்ற இளைஞர்

பில்லி,சூனியம் வைத்து தாய் தன்னுடைய திருமணத்தை நிறுத்துவதாக நினைத்த இளைஞர் அவரைக் கொலைசெய்தார்.

Published:Updated:
கொலை ( சித்திரிப்புப் படம் )

மும்பை வடாலா பஞ்சசீல் நகரில் வசிப்பவர் அக்‌ஷய் தாக்கூர் (25). இவர் பஸ் டிரைவராகப் பணியாற்றிவருகிறார். இவர் தாயார் நிர்மலா. தனியார் செக்யூரிட்டி கம்பெனியில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிவரும் அக்‌ஷய் தாக்கூரின் தந்தை விஜய் தாக்கூர் பணி முடிந்து அதிகாலை வீட்டுக்கு வந்தபோது நிர்மலா பெட்ஷீட் போர்த்தி படுத்திருந்தார். அவரை எழுப்ப முயன்றபோது எழுந்திருக்கவில்லை. இதையடுத்து விஜய் தாக்குர் பெட்ஷீட்டை அகற்றிப் பார்த்திருக்கிறார். அப்போது அவர் மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், நிர்மலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். ஆரம்பத்தில் கொள்ளையர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், நிர்மலாவின் மகன்கள் இருவரும் கொலை நடந்ததிலிருந்து வீட்டில் இல்லாததால், சந்தேகத்தின் பேரில் அவர்களை விசாரிக்க முடிவு செய்தனர்.

அதையடுத்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்தனர். அதில், அதிகாலை நேரத்தில் நிர்மலாவின் மகன்கள் இருவரும் இளம்பெண் ஒருவருடன் வீட்டுக்குள் செல்வதும், பின்னர் பதற்றத்துடன் வெளியில் வேகமாகச் செல்வதும் தெரியவந்தது.

கொலை - சித்திரிப்புப் படம்
கொலை - சித்திரிப்புப் படம்

அதைத் தொடர்ந்து நிர்மலா மகன்கள் இருவரின் செல்போன் சிக்னல்களை ஆய்வுசெய்த போலீஸார், இருவரையும் இளம்பெண் ஒருவருடன் கைதுசெய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசும் காவல்துறையினர், ``நிர்மலாவின் மூத்த மகன் அக்‌ஷயிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் தன் சகோதரன், காதலி ஆகியோருடன் சேர்ந்து தாய் நிர்மலாவைக் கைதுசெய்ததை ஒப்புக்கொண்டார். அக்‌ஷய்க்கு சமீபத்தில் பைக் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில், அவருக்குக் காலில் இரும்புத்தகடு பொருத்தப்பட்டிருக்கிறது. அதோடு வேறு ஓர் ஆபரேஷனும் செய்யப்பட்டிருக்கிறது. அக்‌ஷய் தன் காதலி கோமலைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால், திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்திருக்கிறது. தனக்குத் திருமணம் நடக்காமலிருக்க தாயார் நிர்மலா பில்லி சூனியம் வைத்திருப்பதாகவும், அதனால்தான் திருமணம் நடக்காமல் தள்ளிப்போவதாகவும் அக்‌ஷய் நினைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

அக்‌ஷய், அவர் காதலி கோமல் ஆகியோர் சம்பவத்தன்று திருமணம் தொடர்பாக நிர்மலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த வாக்குவாதத்தில் நிர்மலாவை அக்‌ஷய் கத்தியால் குத்தியிருக்கிறார். கழுத்து, வயிற்றுப் பகுதிகளில் கத்தியால் குத்தியிருக்கிறார். இதில் கோமலும், அக்‌ஷயின் தம்பியும் அவருக்கு உதவியிருக்கின்றனர். அக்‌ஷயும், கோமலும் சேர்ந்து மைனர் சிறுவனை மூளைச்சலவை செய்து தங்களது காரியத்துக்குத் துணையாக இருக்கும்படி செய்திருக்கின்றனர். மூவரையும் கைதுசெய்து, இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்துவிட்டோம். சிறுவன் கூர்நோக்குப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறான்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism