Published:Updated:

`மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார்!' - சென்னையில் பிரபல கார் விற்பனை நிறுவனப் பெண் நிர்வாகி தற்கொலை

சென்னை நுங்கம்பாக்கத்தில் குடியிருந்து வந்த பிரபல பெண் தொழிலதிபர் ரீட்டா, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

REETA
REETA

சென்னை நுங்கம்பாக்கம், கோத்தாரி சாலையில் உள்ள பங்களா வீட்டில் வசித்துவருபவர் லங்காலிங்கம். இவர் பிரபல கார் விற்பனை நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரின் மனைவி ரீட்டா (49). அதே நிறுவனத்தில் இணை இயக்குநராக இருந்தார்.

Lankalingam
Lankalingam

இவர்களின் வீட்டின் மேற்பார்வையாளராக ஏசுபாதம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், இன்று காலை 9 மணியளவில் ரீட்டாவின் வீட்டுக்கு வந்தார். ரீட்டாவின் அறை உள்பக்கமாக தாளிழிடப்பட்டிருந்தது. கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

இதையடுத்து அறையின் உள்ளே பார்த்தபோது ரீட்டா, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஏசுபாதம், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியன் மேற்பார்வையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ரீட்டாவின் அறைக்குள் சென்ற போலீஸார் அவரின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Reeta's Home
Reeta's Home
K.Jerome

பெண் தொழிலதிபர் ரீட்டா, எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், ரீட்டா, மனவருத்தத்தில் இருந்துவந்ததாக தெரியவந்துள்ளது. இதனால்தான் அவர் தற்கொலை செய்துள்ளார் என்கின்றனர் போலீஸார். இருப்பினும் ரீட்டாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், ரீட்டா தற்கொலை செய்து கொண்ட சமயத்தில் அவரின் கணவர் லங்காலிங்கம் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.