Published:Updated:

பூந்தமல்லி: சொந்த வீட்டில் 550 சவரன் நகைத் திருட்டு; தோழியுடன் சிக்கிய தொழிலதிபர் - நடந்தது என்ன?!

தொழிலதிபர் - நகைத் திருட்டு

பூந்தமல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை, லட்சக்கணக்கில் பணத்தைக் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பூந்தமல்லி: சொந்த வீட்டில் 550 சவரன் நகைத் திருட்டு; தோழியுடன் சிக்கிய தொழிலதிபர் - நடந்தது என்ன?!

பூந்தமல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை, லட்சக்கணக்கில் பணத்தைக் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தொழிலதிபர் - நகைத் திருட்டு

சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருக்கு சேகர், ராஜேஷ் என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மகளுக்குத் திருமணம் முடிந்த நிலையில், மகன்கள் இருவரும் ஃபைனான்ஸ் தொழில் செய்துவருகிறார்கள். மேலும், அவர்களுக்கு அந்தப் பகுதியில் ஒரு பேக்கரியும் இருக்கிறது. தமிழ்செல்வியின் இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடிந்து, அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்துவந்துள்ளனர். இந்நிலையில், சேகரின் மனைவி அவரை பிரிந்து தனியாகச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

சேகர், சுவாதி
சேகர், சுவாதி

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீண்டும் வீட்டுக்கு வந்த சேகரின் மனைவி, பீரோவில் வைத்திருந்த தனது 300 சவரன் நகைகளைத் தேடியிருக்கிறார். பீரோவிலிருந்த நகை மாயமானதைத் தொடர்ந்து, ராஜேஷ் பீரோவில் வைத்திருந்த தன் மனைவி மற்றும் அம்மாவின் 200 சவரன் நகை மற்றும் தங்கக்கட்டிகளைத் தேடியிருக்கிறார். அந்த நகையையும் காணவில்லை என்பதைல் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் வீட்டில் இருப்பவர்கள் மீது சந்தேகமாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வீட்டு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் சேகரிடம் விசாரணை நடத்தும்போது முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் சேகரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். ஒரு கட்டத்தில் சேகர் வீட்டிலிருந்த நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மேலும் விசாரணையில், சேகரின் மனைவி பிரிந்து சென்ற நிலையில், அவருக்கு வேளச்சேரியைச் சேர்ந்த சுவாதி (22) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வதுடன், வெளியூர்களுக்குச் சென்றுவருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

இதுவரை சேகர் அந்தப் பெண்ணுக்கு 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகவும், வீட்டிலிருந்த நகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்று 550 சவரன் நகைகளையும் தனது தோழிக்குக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சேகர் சுவாதிக்கு ஒரு கார் ஒன்றை வாங்கி பரிசளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக காவல்துறையினர் சேகரையும் சுவாதியையும் கைது செய்துள்ளனர். மேலும், சுவாதியிடமிருந்த நகை மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.