Published:Updated:

டெல்லியில் ரூ.1,000 கோடி மோசடி... நாசிக்கில் ரெஸ்டாரன்ட்! - தொழிலதிபர் சிக்கியது எப்படி?

பியூஸ் திவாரி

டெல்லியில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு நாசிக்கில் ரெஸ்டாரன்ட் நடத்திய தொழிலதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் ரூ.1,000 கோடி மோசடி... நாசிக்கில் ரெஸ்டாரன்ட்! - தொழிலதிபர் சிக்கியது எப்படி?

டெல்லியில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு நாசிக்கில் ரெஸ்டாரன்ட் நடத்திய தொழிலதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
பியூஸ் திவாரி

டெல்லியில் பில்டராக இருந்தவர் பியூஸ் திவாரி (42). 2011-ம் ஆண்டில் டெல்லியில் கட்டடங்களைக் கட்டி விற்பனை செய்துவந்தார். திடீரென கடந்த 2018-ம் ஆண்டு பொதுமக்களிடம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். அவரைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் கொடுக்கப்படும் என்றும் டெல்லி போலீஸார் அறிவித்திருந்தனர். ஒரே வீட்டைப் பலருக்கு விற்பனை செய்து இந்த மோசடியில் ஈடுபட்டார். திவாரி எங்கு இருக்கிறார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து தேடிவந்த நிலையில், அவர் நாசிக்கில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் நாசிக் சென்று முகாமிட்டனர்.

மோசடி
மோசடி
சித்தரிப்புப் படம்

அவர்கள் பல நாள்களாக நாசிக்கில் தங்கியிருந்து திவாரி குறித்த தகவல்களைச் சேகரித்தனர். இது குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் சாகர் சிங் கூறுகையில், ``திவாரி நாசிக்கில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தவுடன் தனிப்படை போலீஸார் நாசிக்குக்குச் சென்று வெங்காய வியாபாரிகள், உணவங்கள் போன்ற இடங்களில் விசாரணை நடத்தினர். பல நாள்கள் நடத்திய விசாரணையில் திவாரி ரெஸ்டாரன்ட் நடத்துவதாக கான்ஸ்டபிள் ஓம்பிரகாஷ் என்பவருக்குத் தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு சென்று அவரின் நடவடிக்கையைத் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்தனர். இறுதியில் திடீர் ரெய்டு நடத்தி அவரைக் கைதுசெய்துள்ளோம். அவரிடம் விசாரணை நடத்தியதில் 2011-ம் ஆண்டு பில்டராகத் தொழிலை தொடங்கிய திவாரி எட்டு கம்பெனிகளைத் தொடங்கியுள்ளார். அதோடு 15 முதல் 20 ஷெல் கம்பெனிகள் எனப்படும் போலி கம்பெனிகளையும் தொடங்கி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

பியூஸ் திவாரி
பியூஸ் திவாரி

இதனால் 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தி ரூ.120 கோடியைப் பறிமுதல் செய்தனர். இதனால் ஏற்பட்ட இழப்பிலிருந்து மீள ஒரே வீட்டைப் பலருக்கு விற்பனை செய்துள்ளார். பொதுமக்கள் போலீஸில் புகார் செய்ததைத் தொடர்ந்து தென்னிந்தியாவுக்கு சென்று, போலி பெயரில் பல தொழில்களைச் செய்த திவாரி இறுதியாக நாசிக்கில் வந்து ரெஸ்டாரன்ட் தொழில் செய்துவந்தார். அப்பாவி மக்களிடம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.