Published:Updated:

மகாராஷ்டிரா தலைமைச் செயலகம்: தொழிலதிபர் தற்கொலை முயற்சியால் பரபரப்பு!

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

மும்பை தலைமைச் செயலகத்துக்கு வெளியில் தொழிலதிபர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பையின் கடற்கரைப் பகுதியில் மாநில தலைமைச் செயலகம் இருக்கிறது. இந்தத் தலைமைச் செயலகத்துக்கு வெளிப்பகுதிக்கு வந்த ஒருவர் தன்னிடமிருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் அவரிடம் விசாரித்தபோது அவர் பெயர் சுனில் தாமு என்றும், ஜல்காவ் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் என்றும் தெரியவந்தது. அவர் ஒரு தொழிலதிபர். ஜல்காவ் பகுதியைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபர் மீது சுனில் போலீஸில் புகார் செய்திருக்கிறார்.

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தான் மன அழுத்தம் காரணமாக தலைமைச் செயலகம் எதிரில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று வந்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு போலீஸார் கவுன்சலிங் கொடுத்து அனுப்பிவைத்தனர். இதற்கு முன்பு மாநில தலைமைச் செயலகத்தில் மாடியிலிருந்து குதித்து, சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். எனவே, தலைமைச் செயலகத்துக்குள் மாடியிலிருந்து கீழே யாரும் குதித்தால்கூட அவர்கள் இறந்துவிடாமலிருக்க வலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வலையிலும் ஒருவர் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். இதற்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் விவசாயிகள். ஆனால், இப்போது ஒரு தொழிலதிபர் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தால் தலைமைச் செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

மும்பை: விஜய் மல்லையாவின் `கிங் ஃபிஷர் ஹவுஸ்’... ரூ.52 கோடிக்கு விற்பனை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு