Published:Updated:

சென்னையில் தொழிலதிபர் கொலை... பிளாஸ்டிக் கவரில் சடலம் மீட்பு! - நடந்தது என்ன?

கொலை செய்யப்பட்ட பாஸ்கரன்

சென்னையில் கால்வாயில் கிடந்த பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த சடலம் குறித்து விசாரித்தபோது இறந்தது தொழிலதிபர் என்று தெரியவந்தது.

சென்னையில் தொழிலதிபர் கொலை... பிளாஸ்டிக் கவரில் சடலம் மீட்பு! - நடந்தது என்ன?

சென்னையில் கால்வாயில் கிடந்த பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த சடலம் குறித்து விசாரித்தபோது இறந்தது தொழிலதிபர் என்று தெரியவந்தது.

Published:Updated:
கொலை செய்யப்பட்ட பாஸ்கரன்

சென்னை சின்மயா நகர் கால்வாயில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு, கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாகத் தூய்மைப் பணியாளர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் விருகம்பாக்கம் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று கறுப்பு நிற பிளாஸ்டிக் கவரில் சுற்றி, கட்டப்பட்டிருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சடலம் குறித்து விசாரித்தபோது அவர் குறித்த தகவல் தெரியவந்தது.

சடலம்
சடலம்

இது குறித்து விருகம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``சடலமாக மீட்கப்பட்டவர் பாஸ்கரன் என அடையாளம் தெரிந்துள்ளது. நேற்று காலை (2.9.2022) வீட்டைவிட்டு காரில் புறப்பட்ட பாஸ்கரன், பின்னர் வீடு திரும்பவில்லை என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அதனால் பாஸ்கரனைக் காணவில்லை என்று அவரின் மகன் கார்த்திக், நேற்று ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த நிலையில்தான் பிஸாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் பாஸ்கர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் காரும் அந்தப் பகுதியில் அநாதையாக நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளோம். தடய அறிவியல் துறையினர் கைரேகைகளைப் பதிவுசெய்துள்ளனர். பாஸ்கரனின் கை கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணிவைத்து, தலையில் அடித்த காயங்கள் இருந்தன. கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளமும் இருக்கிறது.

மேலும் நேற்றிரவு அவரின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி இரண்டு தடவை பத்தாயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பாஸ்கரனின் சடலம் கிடந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். பாஸ்கரனின் சடலத்தைப் பார்க்கும்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகத் தெரிகிறது. கொலைசெய்யப்பட்ட பாஸ்கரன், பிசினஸ் செய்துவந்திருக்கிறார். கூலிப்படையினர்தான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருப்பதால் எதற்காக பாஸ்கரன் கொலைசெய்யப்பட்டார் என்று விசாரித்துவருகிறோம்” என்றனர்.