Published:Updated:

திருச்சி: வாக்கிங் சென்றபோது படுகொலை... கேபிள் டி.வி உரிமையாளருக்கு ஸ்கெட்ச் போட்ட மர்ம நபர்கள்!

கொலை

வாக்கிங் சென்றபோது முன்பகையால் ஒருவேளை மாதவன் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

திருச்சி: வாக்கிங் சென்றபோது படுகொலை... கேபிள் டி.வி உரிமையாளருக்கு ஸ்கெட்ச் போட்ட மர்ம நபர்கள்!

வாக்கிங் சென்றபோது முன்பகையால் ஒருவேளை மாதவன் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Published:Updated:
கொலை

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த நெருஞ்சலக்குடியைச் சேர்ந்தவர் மாதவன். இவர் சொந்தமாக கேபிள் டி.வி நடத்திவந்திருக்கிறார். இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மனைவியும், ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். நெருஞ்சலக்குடியில் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ஏழரை சென்ட் நிலத்தை, ஒருவர் ஆக்கிரமித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் கோயில் கமிட்டியின் பொருளாளராக மாதவன் இருந்துவந்திருக்கிறார். இந்த நிலையில், நில ஆக்கிரமிப்பு பிரச்னை சம்பந்தமாக மாதவனும் எதிர்ப்பு தெரிவித்து, பேசிவந்ததாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னை பெரிதாக, கோயில் இடத்தில் நடந்திருக்கும் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக அளவீடுகள் நடைபெற்றன. இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

கொலையான மாதவன்
கொலையான மாதவன்

இந்த நிலையில் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள கைலாஷ்நகர் பகுதியில் மாதவன் வாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது அவரை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று மாதவனை வெட்டிக் கொலைசெய்திருக்கிறது. இதில் தலை, கழுத்து எனப் பல இடங்களில் வெட்டு விழுந்ததில் படுகாயமடைந்த மாதவன், சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தையடுத்து லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு, லால்குடி டி.எஸ்.பி சீத்தாராமன், திருச்சி எஸ்.பி சுஜித்குமார் ஆகியோர் நேரில் ஆய்வுசெய்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்ற விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை. கோயில் இடம் ஆக்கிரமிப்பு சம்பந்தமான முன்பகையால் ஒருவேளை மாதவன் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதோடு, வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா என போலீஸ் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவருகிறது.