Published:Updated:

கூடா நட்பு சித்தார்த்தாவை மரணத்துக்கு தள்ளியதா?

சித்தார்த்தா
பிரீமியம் ஸ்டோரி
சித்தார்த்தா

சித்தார்த்தா, கடைசியாக ஒருமுறை காபி டேவில் அமர்ந்து ஒரு காபி அருந்தியிருக்கலாம்...

கூடா நட்பு சித்தார்த்தாவை மரணத்துக்கு தள்ளியதா?

சித்தார்த்தா, கடைசியாக ஒருமுறை காபி டேவில் அமர்ந்து ஒரு காபி அருந்தியிருக்கலாம்...

Published:Updated:
சித்தார்த்தா
பிரீமியம் ஸ்டோரி
சித்தார்த்தா

‘எங்கள் கடையில் அமர்ந்து ஒரு காபி சுவைக்கும் வேளையில், ஏராளமானவை நிகழலாம்’ - காபி டே நிறுவனத்தின் ‘டேக்லைன்’ இது. அந்த காபி டே நிறுவனமே, அதன் உரிமையாளரான சித்தார்த்தாவை ஒரு காபி சுவைக்கும் வேளைக்குள் மரணத்தில் தள்ளியிருக்கிறது. அதற்கான பின்னணியில் ஏராளமான சர்ச்சைகள்... மர்ம முடிச்சுகள்!

தன் 24-வது வயதில், கர்நாடகத்தில் தந்தை யிடம் ஐந்து லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு, தொழிலதிபர் கனவுடன் மும்பைக்கு வந்து இறங்கியவர் சித்தார்த்தா. அங்கு ஜெ.எம். ஃபைனான்ஷியல் சர்வீஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தது முதல் காபி டே நிறுவனத்தை நம்பர் ஒன் நிறுவனமாக வளர்த்தெடுத்தது வரை இவருடைய வாழ்க்கைப் பயணம் சுவாரஸ்யமானது. 1993-ம் ஆண்டு `அமல்கமடேட் பீன் காபி’ என்கிற வர்த்தக நிறுவனத்தை ஆரம்பித்தார் சித்தார்த்தா. அந்த நிறுவனமே இன்றைய ‘காபி டே குளோபல்’ என்று பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. 2015-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழில், இந்தியப் பணக்காரர் பட்டியலில் 75-வது இடத்தைப் பிடித்தார் சித்தார்த்தா. மார்ச் 2019 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 1,752 கஃபே கடைகள் கிளை பரப்பியிருந்தது காபி டே. இவர், கர்நாடக முன்னாள் முதல்வரும் தற்போதைய பி.ஜே.பி பிரமுகருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் என்பது இன்னொரு முக்கியமான அடையாளம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்படியான மாபெரும் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி தான், ஜூலை 29-ம் தேதி கர்நாடகத்தின் மங்களூருவில் உள்ள நேத்ராவதி நதியில் குதித்து மரணித்தார். சித்தார்த்தா இறுதியாக எழுதிய கடிதத்தில், `லாபகரமான வணிகத்தை உருவாக்கத் தவறிவிட்டேன். நான், என்னுடைய அனைத்தையும் கொடுத்துவிடுகி றேன். என்மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு தனியார் நிறுவன பங்குதாரர், நான் விற்ற பங்குகளை மீண்டும் வாங்கும்படி அழுத்தம் கொடுத்துவருகிறார். நீண்ட நாள்களாக அவருடன் போராடி வருகிறேன். சில நாள்களுக்கு முன், என் நண்பரிடமிருந்து அதிக பணம் கடனாகப் பெற்றுள்ளேன். நான் கடன் வாங்கிய அனைவரும் தற்போது எனக்கு அழுத்தம் தரத் தொடங்கிவிட்டனர்.

கூடா நட்பு சித்தார்த்தாவை மரணத்துக்கு தள்ளியதா?

வருமானவரித் துறை மூத்த அதிகாரி ஒருவரின் மூலம் நான் கடும் துன்புறுத் தலுக்கு உள்ளானேன். அவரால் நம் நிறுவனத்தின் பங்குகள் இருமுறை முடக்கப்பட்டன. தொடர்ந்து காபி டே நிறுவனத்தின் பங்குகளையும் கையகப் படுத்துகிறார்கள். வருமானவரித் துறை கூறியதைச் செலுத்திய பிறகும், நமது நிறுவன பங்குகளைத் தொடர்ந்து முடக்கிவிட்டனர். இது நியாயமற்றது. இதனால்தான் நமது நிறுவனங்களில் கடும் நிதி நெருக்கடி உருவாகிவிட்டது’ என்று குற்றம்சாட்டியிருந்தார். இதில்தான் தற்போது சர்ச்சை வெடிக்க ஆரம்பித்துள்ளது. சித்தார்த்தாவின் மரணத்துக்கு வருமானவரித் துறையும் காரணம் என்று, சித்தார்த்தாவின் நெருங்கிய நண்பரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுமான டி.டி.ராஜகவுடா உட்பட பலர் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“சித்தார்த்தா, வருமானவரித் துறையினர் மீது குற்றம்சாட்டியது நியாயமற்றது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையிலேயே ரெய்டு நடத்தப் பட்டது. வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டது. `மைண்ட் ட்ரீ’ நிறுவனத்தில் தன் பங்குகளை விற்றதன் மூலம் 3,200 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய சித்தார்த்தா, 300 கோடி ரூபாய் வரிப்பணம் செலுத்த வேண்டிய நிலையில், வெறும் 46 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தினார். 362.11 கோடி ரூபாய் வருமானத்தைக் கணக்கில் காட்டவில்லை. 118.02 கோடி ரூபாய் கணக்கில் காட்டாமல் கையிருப்பு வைத்திருந்ததை சித்தார்த்தாவே ஒப்புக் கொண்டுள்ளார். இந்தத் தொகையில்கூட, சித்தார்த்தா சுயமதிப்பீட்டு வரியை 14.5 கோடியைச் செலுத்தவில்லை. அனுமதிக்கப்பட்ட வருமானத்தை, காபி டே என்டர்பிரைசஸ் லிமிடெட் தன் பங்கில் வழங்கவில்லை” என்று வருமானவரித் துறை விளக்கம் அளித்துள்ளது.

கூடா நட்பு சித்தார்த்தாவை மரணத்துக்கு தள்ளியதா?

மேலும், சித்தார்த்தா சார்பில் வெளியான கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையது அல்ல என்றும், வருடாந்தர அறிக்கையில் அவர் இட்ட கையெழுத்துக்கும் கடிதத்தில் உள்ள கையெழுத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

“சித்தார்த்தா, தன் ஆடிட்டர்களுக்குக்கூட பணப் பரிவர்த்தனை விஷயங்களைத் தெரியாமல் வைத்திருந்தது பல்வேறு சந்தேகங் களைக் கிளப்புகிறது. தொழில்மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு நஷ்டம் உள்ளிட்ட பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் போனால், திவால் நிலைக்கு முன்னதாகப் பதிவுசெய்வதுதான் நேர்மையான விஷயம். அதை விடுத்து, சித்தார்த்தா எடுத்திருக்கும் முடிவும் அவர் சொல்லும் காரணங்களும் ஏற்புடையதாக இல்லை” என்கிறார்கள் தொழில் துறையினர்.

கூடா நட்பு சித்தார்த்தாவை மரணத்துக்கு தள்ளியதா?

சித்தார்த்தாவுக்கும் கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கும் இருந்த நட்பும் சந்தேக வளையத்துக்குள் வந்திருக்கிறது. `சித்தார்த்தா வீட்டிலிருந்து எடுக்கப் பட்ட கோடிக்கணக்கான பணம், சிவக்குமாருடையதாக இருக்கும்’ என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த நட்பேகூட இவருக்கு ஆபத்தாகியிருக்கலாம் என்கிறார்கள்.

எல்லாவற்றையும் தாண்டி காபி டே என்பது கடை மட்டுமல்ல... இளம் தலைமுறையி னரின் கனவுகளை வளர்த்தெடுத்த இடமும்கூட. பலருடைய கொண்டாட்டங்களுக்குக் களமாகவும் சோகங்களுக்கு வடிகாலாகவும் இருந்தது.

சித்தார்த்தா, கடைசியாக ஒருமுறை காபி டேவில் அமர்ந்து ஒரு காபி அருந்தியிருக்க லாம்... அது அவருடைய வாழ்க்கையில் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கக்கூடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism