Published:Updated:

சேலம்: சிறையில் இருக்கும் அண்ணனுக்கு பிஸ்கட் பாக்கெட்டில் மறைத்து கஞ்சா சப்ளை- வசமாகச் சிக்கிய தம்பி

பிஸ்கட் பாக்கெட்டுகளில் கஞ்சா

சிறையிலிருக்கும் அண்ணனைப் பார்க்கச் சென்ற தம்பி, பிஸ்கட் பாக்கெட்டுகளில் கஞ்சா கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம்: சிறையில் இருக்கும் அண்ணனுக்கு பிஸ்கட் பாக்கெட்டில் மறைத்து கஞ்சா சப்ளை- வசமாகச் சிக்கிய தம்பி

சிறையிலிருக்கும் அண்ணனைப் பார்க்கச் சென்ற தம்பி, பிஸ்கட் பாக்கெட்டுகளில் கஞ்சா கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பிஸ்கட் பாக்கெட்டுகளில் கஞ்சா

சேலம், இளம்பிள்ளை அருகேயுள்ள ஏழு மாத்தனூரைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் திருட்டு வழக்கில் சங்ககிரி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவருகிறார். இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சேலம் மாவட்ட காவல் நிலையங்களில் இருக்கின்றன. இந்த நிலையில், சிறையில் இருக்கும் இவரைப் பார்ப்பதற்கு அவருடைய தம்பி சித்தேஷ் நேற்று பகல் மத்திய சிறைக்கு வந்தார்.

அண்ணன் கார்த்தியைப் பார்ப்பதற்காக சித்தேஷ் சிறை அதிகாரி ஒருவரிடம் மனு எழுதிக் கொடுத்திருக்கிறார். இதையடுத்து, அவர் கைதிகளைச் சந்திக்கும் இடத்துக்குச் சென்றார். அப்போது, தன் அண்ணணுக்காக வாங்கி வந்த பிஸ்கட் பாக்கெட்டைக் கொண்டு சென்றிருக்கிறார். அதை வார்டன் காளிபிரகாஷ் நீண்ட நேரமாக நோட்டமிட்டிருந்திருக்கிறார். பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில், அவர் கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிப் சோதனை செய்தார். அவர் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்துப் பார்த்தபோது, கஞ்சா பொட்டலம் உள்ளே இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சேலம் மத்திய சிறை
சேலம் மத்திய சிறை

இவ்வாறு அவர் எடுத்துச் சென்ற மூன்று பிஸ்கட் பாக்கெட்டுகளிலும் 20 கிராம் கஞ்சா உள்ளேயிருந்து கண்டெடுக்கப்பட்டது. பின்னர் சித்தேஷைப் பிடித்து சிறை வார்டன் காளி பிரகாஷ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில், ஜெயிலர் மதிவாணன் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, சித்தேஷை ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த அஸ்தம்பட்டி காவல் நிலைய போலீஸார், அவரைக் கைதுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

இது குறித்து சிறைத்துறை எஸ்.பி தமிழ்செல்வன் பேசியபோது, “சிறைத்துறை எப்போதும் கூடுதல் கண்காணிப்பில்தான் இருந்துவருகிறது. கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் வந்தாலும், அவர்களைத் தகுந்த பரிசோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கிறோம். அப்படிக் கைதியை பார்க்கவந்த இந்த நபரின்மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் இவரைப் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் பிஸ்கட்டுகளில் கஞ்சா கொண்டுவந்தது தெரியவந்தது” என்றார்.