Published:Updated:

நடுக்கடலில் மிதந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகள்... போலீஸாரிடம் ஒப்படைத்த மீனவர்!

கஞ்சா மூட்டைகள்

கடலில் மிதந்த ஐந்து சாக்கு மூட்டைகளும் கஞ்சா மூட்டை எனத் தெரியவந்தது. அதன் எடை மொத்தம் 160 கிலோ, மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட்டனவா என போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நடுக்கடலில் மிதந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகள்... போலீஸாரிடம் ஒப்படைத்த மீனவர்!

கடலில் மிதந்த ஐந்து சாக்கு மூட்டைகளும் கஞ்சா மூட்டை எனத் தெரியவந்தது. அதன் எடை மொத்தம் 160 கிலோ, மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட்டனவா என போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Published:Updated:
கஞ்சா மூட்டைகள்

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவரப்பட்டு தஞ்சாவூர், நாகை மாவட்ட கடல்வழியாக இலங்கைக்குக் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து பேசப்படுகிறது. கஞ்சா கடத்தலைத் தடுக்க போலீஸார் கண்காணிப்பை அதிகப்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். ஆனாலும் கஞ்சா கடத்தலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் தஞ்சாவூரில் நடுக் கடலில் மிதந்த ஐந்து கஞ்சா மூட்டைகளை மீனவர் ஒருவர் கைப்பற்றி போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

கடலில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டை
கடலில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டை

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரையைச் சேர்ந்தவர் மீனவர் சோமசுந்தரம். இவர் தனக்குச் சொந்தமான படகில், சக மீனவர்களுடன் சுமார் 7 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது கடலில் பெரிய அளவிலான ஐந்து சாக்கு மூட்டைகள் மிதந்துள்ளன. இதைப் பார்த்த மீனவர் சோமசுந்தரத்துக்கு ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிராம்பட்டினம் கடலோர காவல் படைக்கு கடலில் பெரிய மூட்டைகள் மிதப்பதாகத் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் கடலோர காவல் படை அறிவுறுத்தலின் பேரில், ஐந்து மூட்டைகளையும் ஏற்றிக்கொண்டு கரைக்குத் திரும்பினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரையில் நாகப்பட்டினம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பரத் சீனிவாசன், அதிராம்பட்டினம் கடலோர காவல்படை ஆய்வாளர் மஞ்சுளா, உள்ளிட்ட போலீஸார் மீனவர் சோமசுந்தரம் ஏற்றிவந்த மூட்டைகளைக் கைப்பற்றி அதிராம்பட்டினம் கடலோர காவல்படை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று சோதனை நடத்தினர்.

கஞ்சா மூட்டைகள்
கஞ்சா மூட்டைகள்

இதில் கடலில் மிதந்த ஐந்து மூட்டைகளும் கஞ்சா மூட்டைகள் எனத் தெரியவந்தது. பேக் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை சாக்கில் வைத்து மூட்டையாகக் கட்டியுள்ளனர். அதன் எடை மொத்தம் 160 கிலோ, மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து போலீஸார் கூறுகையில் கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள் இலங்கைக்குக் கடத்த முயன்ற மூட்டைகளா என்றும், யார் கடலுக்குள் போட்டார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர். போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததுடன், கஞ்சா மூட்டைகளைப் படகில் ஏற்றி வந்து ஒப்படைத்த மீனவர் சோமசுந்தரத்துக்கு போலீஸார் பாராட்டு தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism