Published:Updated:

அன்னக்கிளி உன்னை தேடுதே... கஞ்சா ராணியும், கண்டுகொள்ளாத போலீஸும்!

லாரியில் ரகசிய அறை அமைத்து, கடத்தப்பட்ட கஞ்சா மூட்டைகள்
பிரீமியம் ஸ்டோரி
லாரியில் ரகசிய அறை அமைத்து, கடத்தப்பட்ட கஞ்சா மூட்டைகள்

46 வயதாகும் அன்னக்கிளி, கடந்த 30 வருடங்களாக பேராவூரணியில் கஞ்சா வியாபாரம் செய்யும் ‘பெரிய கை.’ இது போலீஸாருக்கும் தெரியும்.

அன்னக்கிளி உன்னை தேடுதே... கஞ்சா ராணியும், கண்டுகொள்ளாத போலீஸும்!

46 வயதாகும் அன்னக்கிளி, கடந்த 30 வருடங்களாக பேராவூரணியில் கஞ்சா வியாபாரம் செய்யும் ‘பெரிய கை.’ இது போலீஸாருக்கும் தெரியும்.

Published:Updated:
லாரியில் ரகசிய அறை அமைத்து, கடத்தப்பட்ட கஞ்சா மூட்டைகள்
பிரீமியம் ஸ்டோரி
லாரியில் ரகசிய அறை அமைத்து, கடத்தப்பட்ட கஞ்சா மூட்டைகள்

‘புஷ்பா’ பட பாணியில், லாரியில் ரகசிய அறை அமைத்து ஆந்திராவிலிருந்து பேராவூரணிக்கு கஞ்சா கடத்திய கும்பலைக் கொத்தாக கைதுசெய்திருக்கும் போலீஸ், கடத்தலின் முக்கியப் புள்ளியான அன்னக்கிளியைக் கைதுசெய்ய முடியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது!

கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி இரவு, பேராவூரணி பின்னவாசலைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் தோப்பில் லாரியுடன் ஒரு கும்பல் நின்றிருக்கிறது. ‘நடு ராத்திரியில் ஆடு திருட வந்திருக்கிறார்களோ...’ எனச் சந்தேகித்த அப்பகுதியினர் இது பற்றி போலீஸுக்குத் தகவல் கொடுக்க, எஸ்.ஐ சந்திர சேகரன் தலைமையிலான எஸ்.பி-யின் தனிப் படை டீம் அந்தக் கும்பலை கொத்தாக அள்ளி யது. அந்த லாரியைச் சோதனையிட்டபோது, அதன் கீழ்ப் பகுதியில் ரகசிய அறை அமைத்து அதற்குள் கஞ்சாவை கடத்திவந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

அன்னக்கிளி
அன்னக்கிளி

இந்த கஞ்சா, அன்னக்கிளி என்ற பெண்ணுக் காகக் கடத்திவரப்பட்டிருக்கிறது. லாரி பிடிபட்ட செய்தியறிந்த அன்னக்கிளி, தன் கூட்டாளிகளான மங்களம், நீலா ஆகியோருடன் தலைமறைவாகி விட்டார். யார் இந்த அன்னக்கிளி?

‘‘46 வயதாகும் அன்னக்கிளி, கடந்த 30 வருடங்களாக பேராவூரணியில் கஞ்சா வியாபாரம் செய்யும் ‘பெரிய கை.’ இது போலீஸாருக்கும் தெரியும். ஒவ்வொரு மாதமும் அன்னக்கிளியிடமிருந்து கமிஷன் சென்றுவிடும் என்பதால், அவள்மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால் சில்லறை வியாபாரியாக இருந்த அன்னக்கிளி, இப்போது டன் கணக்கில் வியாபாரம் செய்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டாள்’’ என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

அன்னக்கிளியின் பின்னணி மற்றும் கஞ்சா விற்பனை குறித்துப் பேசுகிற முக்கியப்புள்ளிகள், ‘‘13 வயசுலயே கஞ்சா விற்க ஆரம்பித்தாள் அன்னக்கிளி. கல்யாணம் ஆன பிறகு கணவர் மாணிக்கத்துடன் சேர்ந்து சில வருடங்கள் கீற்று பின்னும் வேலை செய்தார். மூன்று பெண் பிள்ளைகள் பிறந்து குடும்பம் வளர்ந்ததே தவிர, வருமானம் வளரவில்லை. கணவ ரும் இறந்துவிட, வேறு வழியில்லாமல் மீண்டும் கஞ்சா தொழிலுக்கே சென்றுவிட்டாள்.

லாரியில் ரகசிய அறை அமைத்து, கடத்தப்பட்ட கஞ்சா மூட்டைகள்
லாரியில் ரகசிய அறை அமைத்து, கடத்தப்பட்ட கஞ்சா மூட்டைகள்

ஆரம்பத்தில், அறந்தாங்கியிலிருந்து கஞ்சா வாங்கி வந்திருக்கிறாள். அப் போது அறந்தாங்கி காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாக இருந்த ஒருவர், அன்னக் கிளியைப் பிடித்து விசாரிக்க இருவருக் குள்ளும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவள் போலீஸிடம் சிக்காமல் கவனித்துக் கொண்ட அந்த எஸ்.ஐ., தான் பறிமுதல் செய்த கஞ்சா வையும்கூட அவளிடம் கொடுத்து விற்கச் செய்திருக்கிறார். பேராவூரணி லோக்கல் ஸ்டேஷனுக்கும் அன்னக் கிளியிடமிருந்து மாமூல் வாங்கிக் கொடுத்தார். இப்படி தடையே இல்லாமல் தொழில் விரிவடைந்ததால், நேரடியாக ஆந்திராவிலிருந்து கஞ்சா மூட்டைகளைக் கடத்திவந்து விற்கும் அளவுக்கு வளர்ந்தாள்.

கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்கள் மூலமாகவும் கஞ்சா விற்பனையை விரிவுபடுத்திய அன்னக்கிளிக்கு, வலதுகரமாக இருந்து தொழிலை கவனிப்பவர் மங்களம். ஒருமுறை அன்னக்கிளியின் கஞ்சா வியாபாரம் குறித்துப் புகார் கொடுத்த நபரை, ‘அவ மாமூல் தர்றா... நீ தருவியா?’ எனக் கேட்டு அடித்து துவைத்துவிட்டார் சோழ மன்னரின் பெயர் கொண்ட இன்ஸ்பெக்டர் ஒருவர். இந்த விவகாரத்தால், அந்த இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். கடந்த 2018-ல் ஒரு எஸ்.ஐ அன்னக்கிளியைக் கைதுசெய்தார். ஆனால், மறுநாளே ஜாமீனில் வெளிவந்த அன்னக்கிளி, தனது அதிகார பலத்தை வைத்து அந்த எஸ்.ஐ-யையும் வேறு ஊருக்கு மாற்றிவிட்டாள்.

மங்களம்
மங்களம்

ஒரு கட்டத்தில், ‘மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்துட் டோம். இனியாவது திருந்தி வாழலாம்’ என்றெண்ணி தொழி லிலிருந்து விலகி வெளியூர் சென்றுவிட்டாள். மாமூல் நின்றுபோனதால் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கோபமாகி, அன்னக் கிளியை அழைத்து வந்து மீண்டும் கஞ்சா விற்கவைத்துவிட்டார்.

அன்னக்கிளியின் கஞ்சா சாம்ராஜ் யத்தில், 13 வயது பள்ளி மாணவர்கள் முதல் 60 வயது பெரியவர்கள் வரை அடிமையாகிக் கிடக்கிறார்கள். கஞ்சா வருமானத்தில் சமீபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புது வீடு கட்டியிருக்கிறாள் அன்னக்கிளி. இப்போதுவரை அவள்மீது 19 வழக்குகள் மட்டுமே உள்ளன. அவையும்கூட ‘பெட்டி கேஸ்’கள்தான். காரணம், கிலோக் கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்தாலும் கிராம் அளவில் மட்டுமே கணக்கு காட்டிக் காப்பாற்றி விடுகிறது லோக்கல் போலீஸ். எனவேதான் அன்னக்கிளி கஞ்சா ராணியாக வளர்ந்து நிற்கிறார்’’ என்றனர் வேதனையுடன்.

பிரித்திவிராஜ் செளகான்
பிரித்திவிராஜ் செளகான்

தலைமறைவாக இருக்கும் அன்னக்கிளி மற்றும் மங்களத்திடம் பேச முயன்றோம். இருவரது செல்போன்களும் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருந்தன.

புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பட்டுக் கோட்டை டி.எஸ்.பி பிரித்திவிராஜ் செளகானிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டபோது,

‘‘அன்னக்கிளி குறித்து முழுமையாக விசாரித்துவருகிறேன். அன்னக்கிளி மற்றும் அவரின் குரூப்பைச் சேர்ந்த அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இனிமேல் அவர்கள் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடாத வகையில், சொத்து முடக்கம் போன்ற உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பார்க்கலாம்!