Published:Updated:

சேஸிங்... சுற்றிவளைப்பு... குண்டுவீச்சு! - ஆந்திராவில் நடந்த விறுவிறு காட்சிகள்...

ஆந்திரா
பிரீமியம் ஸ்டோரி
ஆந்திரா

ஆனால், சற்று நேரம் முன்பாகத்தான் ஹரி கஞ்சாவை சப்ளை செய்துவிட்டு, `டி.என் 19 ஜெ 5454’ என்கிற பதிவு எண் கொண்ட காரில் ஆந்திரா நோக்கி விரைவதாக இன்ஃபார்மர்கள் தகவல் சொன்னார்கள்

சேஸிங்... சுற்றிவளைப்பு... குண்டுவீச்சு! - ஆந்திராவில் நடந்த விறுவிறு காட்சிகள்...

ஆனால், சற்று நேரம் முன்பாகத்தான் ஹரி கஞ்சாவை சப்ளை செய்துவிட்டு, `டி.என் 19 ஜெ 5454’ என்கிற பதிவு எண் கொண்ட காரில் ஆந்திரா நோக்கி விரைவதாக இன்ஃபார்மர்கள் தகவல் சொன்னார்கள்

Published:Updated:
ஆந்திரா
பிரீமியம் ஸ்டோரி
ஆந்திரா

கஞ்சா கும்பலின் காரை கும்மிடிப்பூண்டியிலிருந்து சேஸ் செய்து ஆந்திராவுக்குச் சென்று அவர்களை வளைத்துப்பிடித்த சென்னை போலீஸார் மீது, அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசியதில் எஸ்.ஐ உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். அப்போதும் விடாமல் மூன்று பேரைக் கைதுசெய்த போலீஸார் கஞ்சா, அரிவாள் உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம், சென்னை பூந்தமல்லியை அடுத்த புளியம்பேட்டில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் 18 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அந்த வீட்டிலிருந்த ஜெயசூர்யா, அருண், சஞ்சய், ரஞ்சித்குமார் உட்பட எட்டுப் பேரை கைதுசெய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிதம்பரத்தைச் சேர்ந்த ஹரி என்பவன் கஞ்சா கும்பலுக்குத் தலைவனாக இருப்பது தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து ஹரியைத் தேடிவந்தனர். இந்தநிலையில்தான், ஏப்ரல் 27-ம் தேதி கும்மிடிப்பூண்டியில் ஹரி கஞ்சா சப்ளை செய்துகொண்டிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, போலீஸார் அங்கு விரைந்தனர். அதன் பிறகே கார் சேஸிங், வெடிகுண்டு வீச்சு என விறுவிறு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

சேஸிங்... சுற்றிவளைப்பு... குண்டுவீச்சு! - ஆந்திராவில் நடந்த விறுவிறு காட்சிகள்...

கும்மிடிப்பூண்டி டு தடா!

“என்ன நடந்தது?” என்று தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். “கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம் அருகிலுள்ள மைதானத்தில் அதிகாலை நேரத்தில், ஹரி கஞ்சா சப்ளை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக ஹரியைப் பிடிக்க மதுரவாயல் எஸ்.ஐ சுதாகர் தலைமையில் ஐந்து போலீஸார் அங்கு விரைந்தனர். ஆனால், சற்று நேரம் முன்பாகத்தான் ஹரி கஞ்சாவை சப்ளை செய்துவிட்டு, `டி.என் 19 ஜெ 5454’ என்கிற பதிவு எண் கொண்ட காரில் ஆந்திரா நோக்கி விரைவதாக இன்ஃபார்மர்கள் தகவல் சொன்னார்கள். உடனே அவர்கள் சொன்ன பாதையில் போலீஸார் வாகனம் விரைந்தது. ஒருகட்டத்தில் அந்த காரையும் போலீஸார் பார்த்துவிட்டார்கள். போலீஸார் சேஸிங் செய்யச் செய்ய விடாமல் அந்த காரும் பயங்கர வேகத்தில் விரைந்தது. ஆந்திர மாநிலம், தடா பகுதியில் நெரிசலான சாலை ஒன்றில் சென்ற கார் ஹரிசனவாடா என்கிற பகுதியில் நின்றுவிட்டது. அதிலிருந்து சிலர் இறங்கித் தப்பியோடினர்.

பின்தொடர்ந்து சென்ற போலீஸார், புதிய இடம் என்பதால் ஒன்றும் பிடிபடாமல் திகைத்தனர். அப்போதுதான் அங்கிருந்த ஒரு வீட்டை அக்கம்பக்கத்தினர் பதற்றத்துடன் பார்க்கவே... கஞ்சா கும்பல் அந்த வீட்டுக்குள்தான் ஓடி ஒளிந்திருக்கிறது என்பதை போலீஸார் யூகித்தனர். உடனடியாக அந்த வீட்டை சுற்றிவளைத்த போலீஸார், அதிரடியாக உள்ளே நுழைந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் வீட்டுக்குள் பதுங்கியிருந்த ஹரி மற்றும் சிலர் வீட்டின் பக்கவாட்டுச் சுவர்மீது ஏறிக் குதித்து ஓட்டம் பிடித்தனர். விடாமல் துரத்திய போலீஸார் நரேஷ்குமார், டெல்லி, முரளி ஆகிய மூன்று பேரை மடக்கிப் பிடித்தார்கள். அப்போது தப்பியோடிய ஒருவன் போலீஸாரை நோக்கி நாட்டு வெடிகுண்டை வீசினான். அது வெடித்துச் சிதறியதில் எஸ்.ஐ சுதாகர், காவலர் வெயில்முத்து மற்றும் இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த குதினமுனுசாமி ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது.

டெல்லி, முரளி
டெல்லி, முரளி

காயத்தையும் பொருட்படுத்தாமல், அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று கிலோ கஞ்சா, 10 அரிவாள்கள், செல்போன்களைப் பறிமுதல் செய்த போலீஸார் சென்னை வந்தடைந்தனர். போலீஸாரை நோக்கி வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு அவர்கள்மீது படாமல் அருகில் விழுந்ததால், நல்லவேளையாகப் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. ஒருவருக்குக் காலிலும் மற்றொருவருக்கு நெற்றியிலும் சிறு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது” என்றார்கள்.

தனிப்படை போலீஸார் இப்படிச் சொன்னாலும் இன்னும் சில போலீஸாரோ, “கஞ்சா கும்பலைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டை வீசியதாகத் தெரியவில்லை. அந்த வீட்டிலிருந்த ஒரு அலமாரியில் கஞ்சா உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்யும்போது அங்கிருந்த ஒரு நாட்டு வெடிகுண்டு கைதவறி கீழே விழுந்து வெடித்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட காயம்தான் அது” என்கிறார்கள். என்ன உண்மை என்பது காவலர்களுக்கே வெளிச்சம்.

சேஸிங்... சுற்றிவளைப்பு... குண்டுவீச்சு! - ஆந்திராவில் நடந்த விறுவிறு காட்சிகள்...
சேஸிங்... சுற்றிவளைப்பு... குண்டுவீச்சு! - ஆந்திராவில் நடந்த விறுவிறு காட்சிகள்...
சேஸிங்... சுற்றிவளைப்பு... குண்டுவீச்சு! - ஆந்திராவில் நடந்த விறுவிறு காட்சிகள்...

கஞ்சா வலையில் காவலர் வாரிசுகள்!

இதற்கிடையே தப்பியோடிய ஹரி, தடா காவல் நிலையத்தில் சரணடையவே, போலீஸார் அவரைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். சிதம்பரத்தைச் சேர்ந்த ஹரி மீது கொலை வழக்கு, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான கல்லூரி மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு கஞ்சாவை தாராளமாகக் கொடுக்கும் ஹரி, அவர்களைவைத்தே ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்தியிருக்கிறார். இப்படி ஹரி விரித்த வலையில் காவல்துறையைச் சேர்ந்தவர்களின் வாரிசுகளும் விழுந்ததுதான் அதிர்ச்சியான விஷயம்.

சென்னை மாநகர காவல்துறையில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒருவரின் மகன் ஹரியில் பிடியில் இருந்திருக்கிறான். அவனையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம், புளியம்பேட்டில் போலீஸார் கைதுசெய்தவர்களில் ஒருவனான கல்லூரி மாணவனின் அம்மா ஆவடி பட்டாலியனில் பணிபுரிகிறார். தற்போது தடாவில் போலீஸார் கைதுசெய்தவர்களில் ஒருவனான நரேஷ்குமார், சமீபத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 2.5 கிலோ நகைக் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவன். இதையடுத்து நரேஷ்குமார் காஞ்சிபுரம் சரக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறான்.

சுதாகர்
சுதாகர்

தேவை பாதுகாப்பு ஏற்பாடுகள்!

சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடைக் கொள்ளையில், கொள்ளையர்களைப் பிடிக்க 2017, டிசம்பர் மாதம் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையிலான டீம் ராஜஸ்தான் சென்றது. அப்போது அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெரியபாண்டி மீது முனிசேகரின் துப்பாக்கிக்குண்டு பாய்ந்ததில், பெரியபாண்டி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வெளி மாநிலங்களுக்கு குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும்போது தகுந்த பாதுகாப்புடனும், உதவி கமிஷனர் ரேங்க்கில் உள்ள அதிகாரி தலைமையிலும் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், மேற்கண்ட சம்பவத்தில் தமிழகத்திலிருந்து சேஸ் செய்துகொண்டு, ஆந்திராவுக்குள் நுழைந்ததால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இருப்பினும், மேற்கண்ட சம்பவத்தைத் தொடர்ந்து தனிப்படையினர் வெளிமாநிலம் சென்றால், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், தகுதியான உயரதிகாரி தலைமையில்தான் செல்ல வேண்டும் என்று காவல்துறை தலைமை உத்தரவிட்டுள்ளது.