Published:Updated:

கையில் துப்பாக்கி; நெத்தியில் டார்ச் லைட்! கேரளக் காட்டில் வேட்டையாடினாரா தமிழக காவலர்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எருமாடு காவல் நிலைய காவலராகப் பணிபுரிந்துவந்த சிஜு
எருமாடு காவல் நிலைய காவலராகப் பணிபுரிந்துவந்த சிஜு

இந்த முறை கேமராக்களைச் சோதனை செய்தபோது ஒரு கேமராவில் கையில் துப்பாக்கி, நெத்தியில் டார்ச்லைட் சகிதமாக நடமாடும் ஒருவரின் உருவம் பதிவாகியிருந்தது.

தமிழக வனத்தை ஒட்டியிருக்கும் கேரளாவின் முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்துக்குள் வன விலங்குகள், வேட்டை கும்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் வனத்துக்குள் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது வழக்கம். குறிப்பிட்ட கால இடைவெளியில் கேமராவில் பதிவான காட்சிகள் சோதனை செய்யப்படும்.

எருமாடு காவல் நிலைய காவலராகப் பணிபுரிந்துவந்த சிஜு
எருமாடு காவல் நிலைய காவலராகப் பணிபுரிந்துவந்த சிஜு

இந்த முறை கேமராக்களை சோதனை செய்தபோது ஒரு கேமராவில் கையில் துப்பாக்கி, நெத்தியில் டார்ச்லைட் சகிதமாக நடமாடும் ஒருவரின் உருவம் பதிவாகியிருந்தது. அதிர்ச்சியடைந்த கேரள வனத்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மர்ம நபர், நீலகிரி மாவட்டம் எருமாடு காவல் நிலைய காவலராகப் பணிபுரிந்துவந்த சிஜு என உறுதி செய்தனர். மேலும் நீலகிரி காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், விசாரணைக்காக சிஜுவைத் தேடியபோது அவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிஜுவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

எருமாடு காவல் நிலைய காவலராக பணிபுரிந்து வந்த சிஜு
எருமாடு காவல் நிலைய காவலராக பணிபுரிந்து வந்த சிஜு
Vikatan

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ``சிஜுவின் தந்தை பெயர் ஜோஸ். இவருக்கு, `துப்பாக்கி ஜோஸ்’ என்ற பெயரும் இருக்கிறது. துப்பாக்கி ஜோஸ்மீது ஓவேலி காவல் நிலையம் மற்றும் வனத்துறையில் வனவிலங்கு வேட்டை தொடர்பான பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் தெரிகிறது. இவர்கள் கூடலூர் ஓவேலி பகுதியில் வசித்துவந்தனர். தற்போது அங்கிருந்து குடிபெயர்ந்து கூடலூர் செம்பாலா பகுதியில் வசித்துவருகின்றனர். காவலர் சிஜுவை விரைவில் கைதுசெய்து, வன விலங்குகளை வேட்டையாடியதைக் கண்டுபிடிப்பதோடு வேட்டைக் கும்பலையும் பிடிப்போம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு