Election bannerElection banner
Published:Updated:

கோவை: உறவினரைக் கடித்ததால் கோபம் - நாயைக் கட்டிவைத்து அடித்துக் கொன்றவர்கள் மீது வழக்கு

கோவை நாய்
கோவை நாய்

கோவை பீளமேடு பகுதியில் நாயைக் கட்டிவைத்து, அடித்துக் கொன்ற விவகாரத்தில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் தனது வீட்டில் ஒரு நாட்டு நாயை வளர்த்துவந்தார். பாலசுந்தரத்தின் வீட்டுக்கருகே வசித்துவருபவர் சீனிவாசன்.

கோவை
கோவை

சமீபத்தில், சீனிவாசன் வீட்டுக்குச் சில உறவினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை பாலசுந்தரம் வளர்த்துவந்த நாய் கடித்தாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த நாயை ஏதாவது செய்ய வேண்டுமென சீனிவாசன் கோபத்துடன் இருந்திருக்கிறார்.

கோவை: கொலை செய்து பாலியல் வன்கொடுமை -  71 வயது மூதாட்டிக்கு நடந்த கொடுமை!

இதையடுத்து, தனக்குத் தெரிந்த வட இந்தியர் ஒருவரை அழைத்துவந்திருக்கிறார். இருவரும் சேர்ந்து அந்த நாயைக் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்களெல்லாம் சீனிவாசனிடம், ``ஏன் எப்படிச் செய்கிறீர்கள்?” எனக் கேட்டதற்கு, முறையாக பதில் சொல்லாமல் சீனிவாசன் அவர்களிடமும் கடிந்துகொண்டிருக்கிறார்.

சீனிவாசன்
சீனிவாசன்

இருவரும் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் ரத்தம் வெள்ளத்தில் அந்த நாய் துடிதுடித்து இறந்தது. இது குறித்து தேசிய விலங்கு நல வாரியத்திடம் அந்தப் பகுதி மக்கள் புகாரளித்துள்ளனர்.

அதன் பிறகு, தேசிய விலங்குகள் நல வாரியத்தின், கோவை மாவட்ட அலுவலர் பிரதீப் பிரபாகரன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதீப் பீளமேடு காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு