Published:Updated:

பங்களாவில் பார்ட்டி; தோழிகள் அழைப்பு; ஆண் நண்பர்களுடன் நெருக்கம் - மாணவியின் மண்டையை உடைத்த காதலன்

குமரி - பார்ட்டி விவகாரம்

போலீஸார் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட வீட்டுக்குச் சென்று பார்த்தபோது ஆணுறைகளும், மது பாட்டில்களும், உள்ளாடைகளும் ஆங்காங்கே கிடந்துள்ளன. இதெல்லாம் என்னவென்று லிப்டியுடன் இருந்ததாகக் கூறப்பட்ட பெண்களிடம் கேட்டுள்ளனர்.

பங்களாவில் பார்ட்டி; தோழிகள் அழைப்பு; ஆண் நண்பர்களுடன் நெருக்கம் - மாணவியின் மண்டையை உடைத்த காதலன்

போலீஸார் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட வீட்டுக்குச் சென்று பார்த்தபோது ஆணுறைகளும், மது பாட்டில்களும், உள்ளாடைகளும் ஆங்காங்கே கிடந்துள்ளன. இதெல்லாம் என்னவென்று லிப்டியுடன் இருந்ததாகக் கூறப்பட்ட பெண்களிடம் கேட்டுள்ளனர்.

Published:Updated:
குமரி - பார்ட்டி விவகாரம்

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே கல்லுக்கூட்டம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி அவர். லிப்டி என்ற செல்லப்பெயரில் அழைக்கப்படுபவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாணவி லிப்டி நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் தலையில் காயங்களுடன் குளச்சல் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். முதலுதவி பெற்ற பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். மருத்துவமனையிலிருந்து தகவல் சென்றதை அடுத்து குளச்சல் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது குளச்சல் போலீஸில் புகாரளித்த லிப்டி, "நான் குளச்சல் பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில் இரவு எனது ஆண் நண்பர்கள் ஆகாஷ், மணிகண்டன், கல்லூரித் தோழிகள் ஆகியோருடன் எனது பிறந்தநாள் பார்ட்டிக்காகத் தயாரானேன். அப்போது அங்கே வந்த எனது பள்ளித் தோழரான சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்த அஜின் வீட்டுக்குள் புகுந்து என் நண்பர்களைக் கம்பால் தாக்கி விரட்டியதோடு, என்னையும் கட்டையால் அடித்து மண்டையை உடைத்துவிட்டு, தப்பி ஓடிவிட்டார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் புகார் அளித்தார்.

லிப்டி காதலனுடன் எடுத்த போட்டோ
லிப்டி காதலனுடன் எடுத்த போட்டோ

இது சம்பந்தமாக போலீஸார் அஜின் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். அஜின் தலைமறைவாக இருக்கிறார். அதேசமயம் போலீஸார் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட வீட்டுக்குச் சென்று பார்த்தபோது ஆணுறைகளும், மது பாட்டில்களும், உள்ளாடைகளும் ஆங்காங்கே கிடந்துள்ளன. இதெல்லாம் என்னவென்று லிப்டியுடன் இருந்ததாகக் கூறப்பட்ட பெண்களிடம் கேட்டுள்ளனர். `எல்லாம் லிப்டிக்குத்தான் தெரியும்’ எனத் தோழிகள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கிடையே லிப்டியின் தோழி ஒருவரின் ஆடியோ வாட்ஸ்அப்களில் வெளியாகியுள்ளது. அதில், `நான் மதுவுக்கு ஆசைப்பட்டு ஒரு நாள்தான் அங்கு சென்றேன். உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்துவிட்டேன். அதன் பிறகு அவர்கள் அழைத்தார்கள். நான் போகவில்லை’ என்று ஆடியோவில் கூறியுள்ளார்.

இது பற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம், "லிப்டி கருங்கல் அருகே ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். அவரின் தாயும் தந்தையும் மார்த்தாண்டம் பகுதியில் வசித்துவருகின்றனர். கல்லூரிக்குச் சென்றுவர வாய்ப்பாக இருக்கும் என லிப்டி குளச்சல் பர்ணட்டிவிளையில் உள்ள தனது உறவினரின் பங்களாவில் தனியாக வசித்துவந்திருக்கிறார். லிப்டியும் அஜினும் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பகலில் அஜினுடன் ஊர் சுற்றும் லிப்டி, இரவில் குரூப் ஸ்டடி எனக் கூறிவிட்டு தனது பங்களாவில் தோழிகளுடன் மது, சிகரெட் என ஜாலியாக இருப்பது வழக்கமாம். சில நேரங்களில் ஆண் நண்பர்களையும் அழைத்து அவர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. போதையில் ஆண் நண்பர்களுடன் கூட்டாக, நெருக்கமாக இருப்பதற்கு 'ஜாயின்ட் அடித்தல்' எனப் பெயரும் வைத்துள்ளனர்.

மேலும் தனது தோழிகளையும் மது குடிக்கவும், சிகரெட் பிடிக்கவும் வீட்டுக்கு அழைப்பாராம் லிப்டி. புதிதாக வீட்டுக்கு வரும் தோழிகள் அங்கு இருக்கும் ஆண் நண்பர்களைப் பார்த்த்து `இது யார்?’ எனக் கேட்டால், `இவர்கள்தான் நமக்கு மது ஏற்பாடு செய்கிறவர்கள்’ எனச் சொல்வாராம். அனைவரும் போதை ஆன பிறகு லிப்டி ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்து, தனது தோழிகளுக்கு ஆசையைத் தூண்டுவாராம். பின்னர் அந்த ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும்படி தோழிகளிடம் சொல்வாராம். இப்படி அடிக்கடி அந்த பங்களாவில் நடந்துவந்திருக்கிறது.

அறையில் சிகரெட் புகைத்த தடயங்கள்
அறையில் சிகரெட் புகைத்த தடயங்கள்

லிப்டியின் ஜாயின்ட் அடிக்கும் பழக்கம் அஜினுக்குத் தெரியவரவே அது பற்றி அவரிடம் கேட்டிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் பிரச்னை வெடித்திருக்கிறது. சம்பவத்தன்று லிப்டி ஆண் நண்பர்களுடனும், தோழிகளுடனும் பங்களாவில் இருக்கும் விஷயம் தெரிந்து இரவு நேரத்தில் பங்களாவுக்குச் சென்றிருக்கிறார். பங்களா அருகில் நின்ற மரத்தின் மீது ஏறி உள்ளே சென்று பார்த்திருக்கிறார் அஜின். அங்கு லிப்டியும், தோழிகளும் ஆண் நண்பர்களுடன் அரைகுறை ஆடைகளுடன் இருந்ததை அஜின் பார்த்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜின் கட்டையால் அவர்களை அடித்து விரட்டியிருக்கிறார். மேலும் லிப்டியின் மண்டையை அடித்து உடைத்திருக்கிறார். அஜின் தலைமறைவாக இருக்கிறார். அவரைக் கைதுசெய்து விசாரித்தால் பல உண்மைகள் தெரியவரும்" என்றனர்.

இதற்கிடையே, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படைக்கு மாவட்ட எஸ்.பி வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பார்ட்டியில் கலந்துகொள்ள மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.