Published:Updated:

கரூர்: போலி ஆவணம்; ரூ. 20 லட்சம் மோசடி! - தலைமைக் காவலர் உட்பட 5 பேர்மீது வழக்கு பதிவு

குளித்தலை
News
குளித்தலை

சுகிதாவும் காந்திசெல்வமும் கணவன், மனைவியாக வாழ்ந்துவந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் கடை திறக்காததால், மாத வாடகையை காந்திசெல்வம் மூலம் கணேசனுக்கு சுகிதா கொடுத்துவந்திருக்கிறார்.

போலி ஆவணம் மற்றும் பணமோசடி செய்ததாக, தலைமைக் காவலர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குளித்தலை காவல் நிலையம்
குளித்தலை காவல் நிலையம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருச்சி மாவட்டம், தண்டலைபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகிதா (40). இவருக்கு கடந்த 2001-ம் ஆண்டு செல்வம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர், குளித்தலை பேராளம்மன் கோயில் தெருவிலுள்ள, திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமான கடையில், வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யும் கடையை நடத்த முன்பணமாக ரூ. 2 லட்சம் கொடுத்து, வாடகைக்கு இருந்துவந்திருக்கிறார்.

அப்போது, திருச்சி மாவட்டம், முசிறி பாரிவள்ளல் நகர்ப் பகுதியை சேர்ந்த காந்திசெல்வம் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காந்திசெல்வம் தற்போது கரூரில் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2009-ம் ஆண்டு, டிசம்பர் மாதம், பழனியில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டனர். இதை அறிந்த சுகிதாவின் கணவர் செல்வம், அவரைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார். பின்னர், சுகிதாவும் காந்திசெல்வமும் கணவன், மனைவியாக வாழ்ந்துவந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் கடை திறக்காததால், மாத வாடகையை காந்திசெல்வம் மூலம் கணேசனுக்கு சுகிதா கொடுத்துவந்திருக்கிறார்.

குளித்தலை
குளித்தலை

இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு சுகிதா அவரின் கடைக்குச் சென்றபோது அங்கிருந்த காந்திசெல்வம், அவரின் மனைவி சுபிதா, திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்த லோகநாதன், கோவிந்தராஜ் ஆகியோர் கடைக்குள் சென்ற சுகிதாவைத் திட்டி, அடித்து, ஆடையை பிடித்து இழுத்து, அவரின் பெயரில் முறைப்படி ஜி.எஸ்.டி எண்ணுடன் உள்ள கடையை அக்கடையின் உரிமையாளர் கணேசன் என்பவருடன் சேர்ந்து, போலியாக ஆவணங்களைத் தயார் செய்து அவரின் கையெழுத்தை போலியாகப் போட்டு, அந்தக் கடையை காந்திசெல்வம், லோகநாதன் பெயருக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால், தான் முதலீடாகப் போட்ட ரூ. 20 லட்சத்தைத் தராமல் ஏமாற்றி மோசடி செய்ததாகவும், கடைக்கு வந்தால் தன்னைக் கொலை செய்வதாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சுகிதா புகார் அளித்தார். அவரின் புகாரைத் தொடர்ந்து, குளித்தலை காவல் நிலைய போலீஸார், காந்திசெல்வம், அவரின் மனைவி சபிதா, லோகநாதன், கோவிந்தராஜ், கணேசன் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர். தலைமைக் காவலர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம், குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.