Published:Updated:

பெங்களூரு: கோயிலில் பெண்ணை அடித்து, உதைத்து வெளியேற்றிய பூசாரி - வழக்கு பதிவுசெய்து போலீஸ் விசாரணை!

வெளியில் இழுத்துச் செல்லப்படும் பெண்

கோயிலுக்கு வந்த பெண்ணை அடித்து, உதைத்து பூசாரி வெளியேற்றிய வீடியோ வேகமாகப் பரவிவரும் நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து போலீஸ் விசாரணை!

பெங்களூரு: கோயிலில் பெண்ணை அடித்து, உதைத்து வெளியேற்றிய பூசாரி - வழக்கு பதிவுசெய்து போலீஸ் விசாரணை!

கோயிலுக்கு வந்த பெண்ணை அடித்து, உதைத்து பூசாரி வெளியேற்றிய வீடியோ வேகமாகப் பரவிவரும் நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து போலீஸ் விசாரணை!

Published:Updated:
வெளியில் இழுத்துச் செல்லப்படும் பெண்

பெங்களூரிலுள்ள அம்ருதஹல்லி என்ற இடத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்கு வந்த ஒரு பெண்ணை கோயில் பூசாரி ஒருவர் அடித்து வெளியில் இழுத்துச் சென்று போடுவது போன்ற வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாகப் பரவியிருக்கிறது. வீடியோவில் சம்பந்தப்பட்ட பெண், கோயில் பூசாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். கோயில் பூசாரி அந்தப் பெண்ணை கோயிலைவிட்டு வெளியில் போகும்படி கூறுகிறார்.

ஆனால் அந்தப் பெண் கோயிலுக்குள்தான் இருப்பேன் என்று கூறி பிடிவாதமாக வாக்குவாதம் செய்கிறார். இதனால் அந்தப் பெண்ணை முடியைப் பிடித்து இழுத்துச் சென்று வெளியில் கொண்டுபோட்டார் ஒரு பூசாரி.

பெங்களூரு: கோயிலில் பெண்ணை அடித்து, உதைத்து வெளியேற்றிய பூசாரி - வழக்கு பதிவுசெய்து போலீஸ் விசாரணை!

அப்படியிருந்தும் அந்தப் பெண் கோயிலைவிட்டுப் போகவில்லை. இதனால் அந்தப் பெண்ணை அந்தப் பூசாரி அடித்து உதைத்தார். முடியைப் பிடித்து வெளியில் இழுத்துச் சென்று போட்ட பிறகும் அந்தப் பெண் கோயிலுக்குள் வந்தார். அவரை பூசாரி எட்டி உதைத்து கோயிலுக்கு வெளியில் இழுத்துப்போட்டார். கோயிலுக்குள் மேலும் மூன்று பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் இதை எதிர்த்து எதுவும் பேசவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஹேமாவதி போலீஸில் புகார் செய்திருக்கிறார். அந்தப் பெண்ணை அடித்தவர் பெயர் முனிகிருஷ்ணா என்றும், கோயில் தரம்தர்ஷி என்றும் தெரியவந்திருக்கிறது. முனிகிருஷ்ணா அந்தப் பெண்ணை ஓட ஓட, கம்பால் அடித்து விரட்டியிருக்கிறார். அவர்மீது தற்போது புகாரின் பெயரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து முனிகிருஷ்ணா போலீஸாரிடம் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில், `சம்பந்தப்பட்ட பெண் தன்னைக் கடவுள் வெங்கடேஷ்வராவின் மனைவி என்றும், மூலஸ்தானத்தில் வெங்கடேஷ்வராவின் சிலைக்கு அருகில் தான் அமரப்போவதாகவும் கூறி அடம்பிடித்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதோடு கோயிலைவிட்டு வெளியில் செல்லும்படி கூறியதால் கோயில் குருக்கள்மீது எச்சில் துப்பினார்.

சொல்லச் சொல்லக் கேட்காமல் தொடர்ந்து கோயிலுக்குள் இருந்ததால் அவரை அடித்து வெளியில் அனுப்பினோம்’ என்று தெரிவித்திருக்கிறார். கோயிலுக்குள் இந்தச் சம்பவம் டிசம்பர் 21-ம் தேதி நடந்தது. கண்காணிப்பு கேமராவில் அவை பதிவாகியிருந்தன. அவை இப்போது சோஷியல் மீடியாவில் பரவியதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.