Published:Updated:

சிவகங்கை: `கிட்னி பெற்றுத் தருகிறேன்... ரூ. 60 லட்சம் செலவாகும்!’ - 4 பேர் மீது வழக்கு பதிவு

கைதுசெய்யப்பட்ட அருளானந்தசுவாமி.
கைதுசெய்யப்பட்ட அருளானந்தசுவாமி.

சிறுநீரகம் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ.60 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஒருவரைக் கைதுசெய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரிநகர் அதியமான் தெருவைச் சேர்ந்தவர் பூமலை (வயது 54). சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை எடுத்துவருகிறார். இந்தநிலையில், காரைக்குடி சுப்பிரமணியபுரம் ஐந்தாவது தெற்குத்தெருவைச் சேர்ந்த அருளானந்த சுவாமியும் அவரின் குடும்பத்தினரும், பூமலை குடும்பத்தினருடன் நட்பாகப் பழகிவந்திருக்கிறார்கள். பூமலையின் நிலையை அறிந்த அருளானந்தசுவாமி, அவரின் மனைவி புஷ்பா, மகன் நெப்போலியன், மகள் நான்சி ஆகியோர், காரைக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படியும், அந்த மருத்துவமனையின் மருத்துவர் தங்களுக்குக் குடும்ப நண்பர் என்றும் பூமலையிடம் கூறியிருக்கிறார்கள்.

பண மோசடி
பண மோசடி
Representational Image

பல நாள்களாக நட்புடன் பழகிவந்ததால், அவர்களின் பேச்சை நம்பிய பூமலை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்தநிலையில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை, அறுவை சிகிச்சைக்காக ரூ.60 லட்சம் கேட்பதாக பூமலையிடம் அருளானந்தசுவாமியும், அவரின் குடும்பத்தினரும் கூறவே, கடன் வாங்கி, நகைகளை அடமானம்வைத்து கடந்த 2016-ம் ஆண்டு முதல் சுமார் நான்கு ஆண்டுகளாக பல தவணைகளாக ரூ.60 லட்சம் பணத்தை அருளானந்தசுவாமியிடம் கொடுத்திருக்கிறார் பூமலை. ஆனால், இப்போது வரை சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நடக்கவில்லை. இதனால் மனமுடைந்த பூமலை, தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார்.

கோடிக்கணக்கில் பண மோசடி! - லட்சக்கணக்கில் போலி விவசாயிகள்
மோசடி
மோசடி
representational image

அப்போது, `பணத்தைக் கொடுக்க முடியாது’ என அருளானந்தசுவாமி கூறியதோடு, பூமலையை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் பூமலை. புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம், அருளானந்தசுவாமி, அவர் மனைவி, மகன், மகள் ஆகிய நால்வர் மீது வழக்கு பதிவு செய்து, அருளானந்தசுவாமியைக் கைது செய்தார்.

கைதுசெய்யப்பட்ட அருளானந்தசுவாமி.
கைதுசெய்யப்பட்ட அருளானந்தசுவாமி.
`கன்னியாகுமரியிலும் கலெக்டர் பெயரில் இ-மெயில் மோசடி!’ தனிப்படை விசாரணை

இது தொடர்பாக போலீஸார் தரப்பில், ``கிட்னி பாதிக்கப்பட்ட பூமலையை, குடும்பத்தினர் சேர்ந்து ஆசைவார்த்தை கூறி பணம் பறித்திருக்கிறார்கள். `கிட்னி வாங்கித் தருகிறேன். ரூ. 60 லட்சம் செலவாகும்’ எனக் கூறியிருக்கிறார்கள். அதை பூமலை நம்பியிருக்கிறார். கேட்கும்போதெல்லாம், `கிட்னி இன்னும் கிடைக்கவில்லை’ எனக் கூறி ஏமாற்றியிருக்கிறார்கள். நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். இவர்களில், அருளானந்தசுவாமியின் மகள் நான்சி சிங்கப்பூரில் இருக்கிறார். மற்ற அனைவரிடமும் விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு