Published:Updated:

விருதுநகர் பாலியல் வழக்கு: கைதானவர்களிடம் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிசிஐடி!

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்ற படம்

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் உட்பட 4 பேரும் சி.பி.சி.ஐ.டி விசாரணை முடிந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரை கடந்த 29-ம் தேதி 6 நாள்கள் சி.பி.சி.ஐ.டி போலீஸ் காவலில் எடுத்தது. 6 நாள்களாக 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று விசாரணை நிறைவு பெற்றது. நான்கு பேரிடம் கடந்த 6 நாள்களாக கூட்டாகவும், தனித்தனியாகவும் குறுக்கு விசாரணையும், பாலியல் வன்கொடுமை நடைபெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றும் சி.பி.சி.ஐ.டி காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. கைதுசெய்யப்பட்டவர்களின் செல்போன்களை ஆய்வு செய்ததிலும், சம்பவ இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தியதிலும் சி.பி.சி.ஐ.டி வசம் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்ற படம்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்ற படம்

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குடோனிலிருந்து போதை ஊசிகள், போதை மாத்திரைகள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், செல்போன்களை ஆய்வு செய்ததின் அடிப்படையிலும் அவர்களுடைய நண்பர்கள் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, விவரங்களை வாக்குமூலமாக பெற்றுள்ளது சி.பி.சி.ஐ.டி. இந்த விசாரணையை வீடியோ பதிவும் செய்ததாக தெரிகிறது. இதனிடையே கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் உள்ள 4 பள்ளி மாணவர்களிடம் கடந்த 1-ம் தேதி 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. காலை 9:30 மணிக்கு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களைச் சந்தித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி போலீஸ், பகல் 2:30 மணிக்கு விசாரணையை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு மட்டுமே தொடர்புள்ளதாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்ற படம்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்ற படம்

இந்த நிலையில், 8 பேருடைய நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு பெறுவதைத்தொடர்ந்து, ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமைத்தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவர்கள் 4 பேரையும், வரும் 18-ம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism